பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம சுகாதார செவிலியர் கூட்டமைப்பினர் போராட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம சுகாதார செவிலியர் கூட்டமைப்பினர் போராட்டம்
X

நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு தமிழ்நாடு அரசு கிராம சுகாதார செவிலியர்கள் கூட்டமைப்பினர் போராட்டம் நடத்தினர்.

நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு தமிழ்நாடு அரசு கிராம சுகாதார செவிலியர்கள் கூட்டமைப்பினர் போராட்டம்.

பணி பாதுகாப்பு இல்லை. தமிழக அரசு ஆதரவாக இல்லை. நெல்லை ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய கிராமப்புற செவிலியர்கள்.

கொரோனா தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்படுவதால் சிரமத்திற்கு உள்ளதாகவும் இலக்கு நிர்ணயித்தால் கட்டாயப்படுத்தி தடுப்பூசி செலுத்தி கொள்ள மக்களை அழைக்கும் போது தாக்குதலுக்கு உள்ளாகிறோம். பணி பாதுகாப்பு இல்லாத சூழல் உள்ளது. நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு தமிழ்நாடு அரசு கிராம சுகாதார செவிலியர்கள் கூட்டமைப்பினர் போராட்டம் நடத்தினர்.

தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பூசிகளை வீடு வீடாகச் சென்று போட வேண்டும் என சுகாதாரத் துறை ஊழியர்களை தமிழக அரசு வலியுறுத்தி வருகிறது. இந்த நிலையில் சுகாதார ஊழியர்கள் மக்களை நேரடியாக சென்று சந்தித்து தடுப்பூசி செலுத்திக் கொள்ள வழி இருக்கும் போது பல்வேறு இன்னல்களை சந்திக்க நேரிடுவதாக கூறி கிராமப்புற சுகாதார செவிலியர்கள் நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு அரசு கிராம சுகாதார செவிலியர்கள் கூட்டமைப்பு சார்பில் பெருந்திறன் முறையீடு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு அரசு கிராம சுகாதார செவிலியர்கள் சங்கம் தமிழ்நாடு அரசு கிராம பகுதி சமுதாய சுகாதார நல சங்கம் உள்ளிட்ட பல்வேறு சங்கங்களைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு மாவட்ட ஆட்சியரிடம் முறையீடு செய்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தின் போது கொரோனா தடுப்பூசி செலுத்துவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து பொதுமக்கள் கர்ப்பிணிப் பெண்கள் பாலூட்டும் தாய்மார்களுக்கு அரசு சார்பில் விளக்கம் அளிக்க வேண்டும். மருத்துவ வழிகாட்டுதலுக்கு மாறாக தாய்-சேய் நலன் பணியை விட்டு வீடு வீடாகச் சென்று தடுப்பூசி போடும் பணிகள் மேற்கொள்ள வலியுறுத்துவதை உடனடியாக கைவிடவேண்டும். தடுப்பூசி செலுத்திக் கொள்ள இலக்கு நிர்ணயம் செய்யக்கூடாது. கிராம சுகாதார செவிலியர்களின் முதன்மை பணியான தாய்-சேய் பணியினை பாதிக்காத வகையில் தடுப்பூசி முகாம் களை சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே நடத்த வேண்டும்.

நெல்லை மாவட்டத்தில் கொரோனா பணிக்கான ஊக்கத்தொகை கிடைக்க தகுதி இருந்தும் சுகாதார பணியாளர்களுக்கு பரிந்துரை செய்யாதவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். தினசரி கிராம பகுதிகளுக்கு கொரோனா தடுப்பு ஊசி செலுத்துவதற்கு செல்லும்போது பல்வேறு பாதிப்புகளை சந்திக்க நேரிடுகிறது. அரசு தடுப்பூசி செலுத்த கட்டாயம் என அறிவிக்காத நிலையில் கிராமப்புறங்களில் தடுப்பு ஊசி செலுத்துவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டு அதற்காக செல்லும் போது பல்வேறு வகையில் தாக்குதலுக்கு உள்ளாகிறோம். எங்களுக்கு பணியில் பாதுகாப்பு இல்லாத சூழல் உள்ளது. அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். இதைதொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட கிராமப்புற செவிலியர் சங்கத்தின் கூட்டமைப்பினரை காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளிக்க செய்தனர்.

Tags

Next Story
சுகர் , பிபி இருந்தா உடனே குறைக்க ட்ரை பண்ணுங்க ..இல்லனா ஸ்ட்ரோக் வருமாமா !.