பாளையங்கோட்டையில் விஜய் மக்கள் இயக்கத்தினர் ஆலோசனை கூட்டம்

பாளையங்கோட்டையில் விஜய் மக்கள் இயக்கத்தினர் ஆலோசனை கூட்டம்
X

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் ஆலோசனை கூட்டம் நடைப்பெற்றது. 

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் ஆலோசனை கூட்டம் நடைப்பெற்றது.

ஊரக உள்ளாட்சி தேர்தலின் வெற்றியை தொடர்ந்து நகர்புற உள்ளாட்சி தேர்தலும் அதிக இடங்களில் போட்டியிட முடிவெடுத்திருப்பதாக விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் ஆலோசனை கூட்டம் நடைப்பெற்றது. இதில் நெல்லை மாவட்டத்தின் விஜய் மக்கள் இயக்கத்தை சார்ந்த இளைஞரணி, மாணவரணி, விவசாயிகள் அணி, மீனவர் அணியினர் பங்கேற்று நகர்புற உள்ளாட்சி தேர்தலை சந்திப்பதற்காக ஆலோசனை மேற்கொண்டனர்.

9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தினர் 123 பேர் வெற்றி பெற்றதால் வர இருக்கும் நகர்புற உள்ளாட்சி தேர்தலில் அதிக இடத்தில் போட்டியிட்டு வெற்றி பெற வேண்டும் என ஆலோசனை கூட்டத்தில் நிர்வாகிகள் பேசினர்கள். இந்த முடிவிற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் கூட்டத்தில் பங்கேற்ற கட்சியினர் மின் விளக்கை அணைத்து செல்போன் டார்ச் ஒளியை காண்பித்து ஆதரவு தெரிவித்தனர்.

கூட்டத்திற்கு கார்த்திக், விஜய் மக்கள் இயக்கம் நெல்லை, சங்கர், விஜய் மக்கள் இயக்கம் தென்காசி உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் ரசிகர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!