வீரபாண்டிய கட்டபொம்மன் திருவுருவ சிலைக்கு அமமுகவினர் மாலை அணிவித்து மரியாதை

வீரபாண்டிய கட்டபொம்மன் திருவுருவ சிலைக்கு அமமுகவினர் மாலை அணிவித்து மரியாதை
X

வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்த நாளையொட்டி நெல்லையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

நெல்லையில் வீரபாண்டிய கட்டபொம்மன் திருவுருவ சிலைக்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் மாலை அணிவித்து மரியாதை.

சுதந்திரப் போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்த நாளையொட்டி அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை.

அம்மா மக்கள் முன்னேற்ற கழகப் பொதுச்செயலாளர் டிடிவி. தினகரன் ஆணைக்கிணங்க ஆங்கிலேயரின் சிம்ம சொப்பனமாக விளங்கிய வீரபாண்டிய கட்டபொம்மனின் 262 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு நெல்லை மாநகர் மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

நெல்லை மாவட்ட கழக செயலாளர் A.பரமசிவன் தலைமையில் பாளை பஸ் நிலையம் அருகில் உள்ள வீரபாண்டிய கட்டபொம்மனின் முழு திருவுருவ சிலைக்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சிக்கு பாளையங்கோட்டை பகுதி கழக செயலாளர் பாளை ரமேஷ் முன்னிலை வகித்தார்.

இந்நிகழ்வில் திருநெல்வேலி அவைத்தலைவர் கோட்டூர் காமீம், மாவட்ட துணைச்செயலாளர் நயினார், பொருளாளர் பாஸ்கர் சகாயம், பொதுக்குழு உறுப்பினர் சிகேடிசி பொன்னுச்சாமி, தச்சை ஆறுமுகம் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்