வாலிபரை ஏமாற்றி திருமணம்: பணத்துடன் ஓட்டம் பிடித்த பெண்
திருமணமான மகள் இருப்பதை மறைத்து வாலிபரை மணந்து பணத்துடன் தப்பிய நெல்லை பெண்.
திருமணமான மகள் இருப்பதை மறைத்து கோபி என்ற வாலிபரை மணந்த பெண் பணத்துடன் தப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் குள்ளம்பாளையம் புதிய குடிநீர் தொட்டி காலனியை சேர்ந்தவர் கதிரவன் (38). இவருக்கு திருமணம் ஆகவில்லை என்று கூறப்படுகிறது. கதிரவன் கோவையில் உள்ள ஒரு தனியார் ஆலையில் வேலை பார்த்து வருகிறார். இதையடுத்து அதே பகுதியை சேர்ந்த மஞ்சு என்பவர் மூலம் பெண் பார்த்து வந்துள்ளார். மஞ்சு கோவில்பட்டியை சேர்ந்த மணி என்பவரை தொடர்பு கொண்டுள்ளார். மணி தில்லைக்கூத்தனார் தெருவைச் சேர்ந்த கருப்பசாமி மனைவி தில்லை துரைச்சி (52) என்பவரிடம் பேசியுள்ளார். இதையடுத்து தில்லை துரைச்சி
பாளையங்கோட்டை மார்க்கெட் முப்புடாதி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர் மனைவி கவிதா (37) என்பவரை பெண் பார்த்துள்ளார். கவிதாவுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். மூத்த மகள் சென்னையில் திருமணமாகி கணவருடன் வசித்து வருகிறார். கணவன்- மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மணிகண்டன் மனைவி கவிதாவை பிரிந்து சென்றுவிட்டார். இதனால் திருமணமானதை மறைத்து கவிதாவை கதிரவனுக்கு கடந்த மாதம் கோபிக்கு அழைத்துச்சென்று தில்லை துரைச்சி திருமணம் செய்து வைத்துள்ளார். பின்னர் தில்லை துரைச்சி அவர்களுடன் குள்ளம்பாளையத்தில் இருந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று காலை திடீரென கவிதாவும், தில்லை துரைச்சியும் மாயமாகி உள்ளனர். இதனை அறிந்த கதிரவன் அவர்களை தேடிய போது வீட்டில் இருந்த ரூபாய் ஒரு லட்சம் பணமும் மாயமானது தெரியவந்தது. கதிரவன் அவர்களை தேடி நெல்லைக்கு வந்த போது அவர்கள் இருவரும் கதிரவனிடம் சிக்கினர். அவர் பாளையங்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு அவர்களை அழைத்து சென்றார். பின்னர் பாளை குற்றப்பிரிவு போலீசக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தொடர்ந்து வேறு நபர்களை திருமணம் செய்து ஏமாற்றி உள்ளனரா என்ற கோணத்தில் விசாரணை நடந்து வருகிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu