3 மாதங்களுக்கு ஒரு முறை திருநங்கைகள் குறைதீர் கூட்டம்: நெல்லை ஆட்சியர்

3 மாதங்களுக்கு ஒரு முறை திருநங்கைகள் குறைதீர் கூட்டம்: நெல்லை ஆட்சியர்
X

மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திருநங்கைகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய நெல்லை ஆட்சியர்.

வரும் மே 1ம் தேதி திருநங்கைகளுக்கான குறைதீர்க்கும் கூட்டம் நடத்தப்படும் என நெல்லை ஆட்சியர் விஷ்ணு தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் முதன் முறையாக திருநங்கைகள் குறைதீர் கூட்டம் நடத்தப்படும் என திருநங்கைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் விஷ்ணு தெரிவித்தார்.

திருநெல்வேலியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கில் சர்வதேச திருநங்கைகள் தினத்தையொட்டி நடைபெற்ற திருநங்கைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் 9 பேருக்குரூ.2 லட்சத்து 82 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள், 61 பேருக்கு முதல்வர் காப்பீட்டு பயன்கள் மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.

நிகழ்வில் பேசிய மாவட்ட ஆட்சியர் விஷ்ணு, பொதுமக்கள், விவசாயிகள் குறைதீர் கூட்டம் போல மூன்று மாதங்களுக்கு ஒருமுறை திருநெல்வேலி மாவட்டத்தில் திருநங்கைகள் குறைதீர் கூட்டம் நடத்தப்படும். அதன்படி வரும் மே முதல் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திருநங்கைகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறும். கூட்டத்தில் சமூகநலத்துறை, போலீஸ் உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் பங்கேற்று திருநங்கைகளின் குறைகளை தீர்த்து வைப்பார்கள்.

திருநங்கைகள் பட்டப்படிப்பு படித்திருந்தாலும் அரசு பணி கிடைப்பதில் சிரமம் உள்ளது. எனவே அரசுப்பணிக்கான அரசாணையில் அவர்களது பெயர் மாற்றம் உள்ளிட்டவை மாவட்ட அளவில் மேற்கொள்ளப்படும்.

திருநங்கைகளின் வாழ்வாதார மேம்பாட்டு திட்டங்கள் செயல்படுத்தப்படும். கல்லூரிகளில் உயர் கல்வி பயில திருநங்கைகளுக்கும் ஏற்பாடு செய்யப்படும் என்று தெரிவித்தார்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!