நெல்லையில் பாரம்பரிய உணவு கண்காட்சி: மாவட்ட ஆட்சியர் துவக்கி வைப்பு

நெல்லையில் பாரம்பரிய உணவு கண்காட்சி: மாவட்ட ஆட்சியர் துவக்கி வைப்பு
X

மாவட்ட ஆட்சியர் விஷ்ணு கலந்து கொண்டு உணவு கண்காட்சியை தொடங்கி வைத்து உணவு வகைகளை பார்வையிட்டார் .

நவதானியங்களால் செய்யப்பட்ட 50 வகை கொலுக்கட்டைகள், அடுப்பில் சமைக்காத உணவு என சுமார் 300 க்கும் மேற்பட்ட உணவுகள் கண்காட்சி.

நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாரம்பரிய உணவுக் கண்காட்சி நடைபெற்றது. இதில் நவதானிய உணவுகள், அடுப்பில் சமைக்கா உணவுகள் என 300 வகையான உணவு வகைகள் காட்சிக்காக வைக்கப்பட்டிருந்தது. இந்த கண்காட்சியை ஆட்சியர் அலுவலக ஊழியர்கள், கல்லூரி மாணவ-மாணவிகள் பார்வையிட்டனர்.

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மற்றும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்டம் சார்பில் பொதுமக்கள் ஆரோக்கியமான சத்து நிறைந்த பாரம்பரிய உணவு குறித்து அறிந்து கொள்ளும் வகையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாரம்பரிய உணவு கண்காட்சி நடைபெற்றது. இதன் தொடக்க நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் விஷ்ணு கலந்து கொண்டு உணவு கண்காட்சியை தொடங்கி வைத்து உணவு வகைகளை பார்வையிட்டார் .

இந்த கண்காட்சியில் நவதானியங்களால் செய்யப்பட்ட 50 வகை கொலுக்கட்டைகள், நவதானிய பொங்கள் , மரவள்ளிக்கிழங்கு அல்வா, பணங்கிழங்கு லட்டு மற்றும் அடுப்பில் சமைக்காத உணவு என சுமார் 300 க்கும் மேற்பட்ட உணவுகள் காட்சிக்காக வைக்கப்பட்டிருந்தது. இந்த கண்காட்சியை ஆட்சியர் அலுவலக ஊழியர்கள், கல்லூரி மாணவ-மாணவிகள் ஆகியோர் பார்வையிட்டனர். கண்காட்சியை பார்வையிட வந்தவர்களுக்கு பாரம்பரிய உணவு வழங்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து பொதுமக்கள் பாரம்பரிய உணவு குறித்து அறிந்து கொள்ளவும், அவர்கள் செய்முறைகளை தெரிந்து கொள்ளும் வகையில் மாவட்டத்தில் மிகப் பெரிய அளவில் பாரம்பரிய உணவுத் திருவிழா நடத்த திட்டமிட்டு இருப்பதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
பொட்டுக்கடலை..தினமும் ஒரு கைப்பிடி சாப்டுங்க..!அவ்ளோ நன்மைகள் இருக்கு அதுல!