உலக பார்வையற்றோர் தினத்தையொட்டி பார்வையற்ற மாணவ, மாணவியர்கள் சுற்றுலா
நெல்லை அருங்காட்சியகத்துக்கு வந்த பார்வையற்ற மாணவர்களுக்கு கல் சிலைகளை தொடுதல் மூலம் உணர வைத்த காப்பாட்சியம் சிவசத்திய வள்ளி.
நெல்லை அருங்காட்சியகத்துக்கு வந்த பார்வையற்ற மாணவர்களுக்கு கல் சிலைகளை தொடுதல் மூலம் உணர வைத்து இன்ப அதிர்ச்சி கொடுத்த காப்பாட்சியர்.
உலக பார்வையற்றோர் தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் மதர் பைரோஸ் டிரஸ்ட் நிர்வாகிகள் இன்று திருநெல்வேலியில் உள்ள கண் தெரியாதோர் பள்ளி மாணவ- மாணவிகளை பாளையங்கோட்டை அரசு அருங்காட்சியகத்திற்கு சுற்றுலாவாக அழைத்து வந்தனர்.
அருங்காட்சியகத்தில் ஏராளமான வரலாறு சார்ந்த கல் சிலைகள் மற்றும் வரலாற்று ஆவணங்கள் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. அதேசமயம் பார்வையற்ற மாணவர்கள் என்பதால் அவர்களால் அந்த கல் சிலைகளை அறிந்து கொள்ள முடியவில்லை. இதை புரிந்து கொண்ட காப்பாட்சியர் சிவசத்திய வள்ளி, மாணவர்களின் கையை பிடித்து அங்கிருந்த கல் சிலைகளை தொட வைத்து அதன் மூலம் சிலையின் வரலாறு குறித்தும், அதன் வடிவமைப்பு குறித்தும் உணர வைத்தார்.
மேலும் சிலையின் பெயர் என்ன? அதை வடிவமைத்த சிற்பி யார்? சிலைக்கு பயன்படுத்தப்பட்ட கல்லின் தன்மை என சிலையின் ஒட்டுமொத்த வரலாற்றையும் குறித்து காப்பாட்சியர் சிவசத்திய வள்ளி மாணவர்களுக்கு முழுமையாக விளக்கி கூறினார். இதன் மூலம் மாணவர்கள் எளிதில் புரிந்து கொண்டு மனநிறைவோடு அங்கிருந்து சென்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu