நெல்லையில் பயங்கரம்: செல்போன் கடைக்குள் புகுந்து ஊழியரை அரிவாளால் தாக்கிய இளைஞர்

நெல்லையில் பயங்கரம்: செல்போன் கடைக்குள் புகுந்து ஊழியரை அரிவாளால் தாக்கிய இளைஞர்
X

 செல்போன் கடைக்குள் புகுந்து ஊழியரை அரிவாளால் சரமாரியாக தாக்கும் சிசிடிவி காட்சிகள்

செல்போன் கடைக்குள் புகுந்து ஊழியரை அரிவாளால் சரமாரியாக தாக்கும் சக ஊழியரின் வெறிச்செயல். சிசிடிவி காட்சிகளால் பரபரப்பு.

நெல்லையில் பயங்கரம்; பட்டப்பகலில் செல்போன் கடைக்குள் புகுந்து ஊழியரை அரிவாளால் சரமாரியாக தாக்கும் வாலிபர். சக ஊழியரின் வெறிச்செயல் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வைரலாகி வருவதால் பரபரப்பு.

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை முருகன்குறிச்சி பகுதியில் தனியார் செல்போன் கடை இயங்கி வருகிறது. இந்நிலையில் இன்று பட்டப்பகலில் இக்கடையில் பணிபுரியும் ஊழியர் ஒருவரை வாலிபர் ஒருவர் சரமாரியாக அரிவாளால் தாக்கும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரல் ஆகியது.

இதுகுறித்து பாளையங்கோட்டை போலீசார் நடத்திய விசாரணையில் சமந்தபட்ட செல்போன் கடையில் பணிபுரிந்து வரும் செல்வம் மற்றும் ஆதம் மைதீன் ஆகிய இருவருக்கும் நீண்ட நாள் பகை இருந்து வந்துள்ளது. முன்விரோதம் காரணமாக ஆதம் மைதீன் மீது செல்வம் தீரா பகையோடு சுற்றித் திரிந்துள்ளார்.

இந்த நிலையில் இன்று செல்வம் ஒரு நாள் விடுமுறை எடுத்துள்ளார். இருப்பினும் வழக்கம்போல் செல்வம் இன்று கடைக்கு வந்ததால் சக ஊழியர்கள் அவரிடம் விடுமுறை எடுத்துவிட்டு ஏன் வந்தீர்கள் என்று கேட்டுள்ளனர். அதற்கு செல்வம் ஒரு சம்பவம் செய்ய வேண்டி இருக்கிறது என்று கூறியுள்ளார். ஏதோ காமெடியாக பேசுகிறார் என்று ஊழியர்கள் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. இதற்கிடையில் கண்ணிமைக்கும் நேரத்தில் செல்வம் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து அங்கு பணிபுரிந்து கொண்டிருந்த ஆதம் மைதீன் தலைமீது கொலை வெறியோடு தாக்கியுள்ளார்.

இதை தடுக்க சென்ற பசீர் என்ற மற்றொரு ஊழியர் மீதும் அரிவாள் வெட்டு விழுந்துள்ளது. பின்னர் சக ஊழியர்கள் இருவரையும் மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். பாளையங்கோட்டை காவல் துறையினர் செல்வத்தை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பட்டப்பகலில் செல்போன் கடைக்குள் நடந்த இந்த அரிவாளால் வெட்டு சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!