/* */

படுகொலை செய்யப்பட்ட திமுக பிரமுகரின் தாய் கவுன்சிலர் பதவிக்கு வேட்புமனு தாக்கல்

நெல்லையில் அரசியல் பகையால் படுகொலை செய்யப்பட்ட திமுக பிரமுகரின் தாய் மாநகராட்சி கவுன்சிலர் பதவிக்கு வேட்புமனு தாக்கல்.

HIGHLIGHTS

படுகொலை செய்யப்பட்ட திமுக பிரமுகரின் தாய் கவுன்சிலர் பதவிக்கு வேட்புமனு தாக்கல்
X

நெல்லையில் படுகொலை செய்யப்பட்ட திமுக பிரமுகரின் தாய் பேச்சியம்மாள் மாநகராட்சி கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். 

நெல்லையில் அரசியல் பகையால் படுகொலை செய்யப்பட்ட திமுக பிரமுகரின் தாய் மாநகராட்சி கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். தற்போது வரை வேறு யாரும் அவரை எதிர்த்து மனு தாக்கல் செய்யாததால் போட்டியின்றி தேர்வாக வாய்ப்பு.

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை பகுதியைச் சேர்ந்த பொண்ணுதாஸ் என்ற அபே மணி திமுகவில் வார்டு செயலாளராக இருந்தார். சில தினங்களுக்கு முன்பு அபே மணி மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். போலீசாரின் விசாரணையில் அரசியல் பகை காரணமாக அதே பகுதியைச் சேர்ந்த மற்றொரு திமுக பிரமுகர் அருண் பிரவீன் என்பவர் தான் திட்டமிட்டு கூலிப்படை மூலம் அபே மணியை கொலை செய்தது தெரியவந்தது. இந்த வழக்கில் 12 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

கொலை செய்யப்பட்ட அபே மணியின் தாய் பேச்சியம்மாள் நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் நெல்லை மாநகராட்சி வார்டு கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட கட்சியில் விருப்ப மனு அளித்திருந்தார். அதே சமயம் அருண் பிரவீன் தனது உறவினர் ஒருவரை அதே பதவியில் போட்டியிட முயற்சித்ததாகவும், அதற்கு தடையாக இருந்த காரணத்தால் அபே மணியை கொலை செய்ததாகவும் போலீசார் தரப்பில் கூறப்பட்டது.

மேலும் அபே மணி நெல்லை மத்திய மாவட்ட திமுக செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான அப்துல் வகாப்புக்கு மிகவும் நெருக்கமானவராக இருந்து வந்தார். எனவே ஏற்கனவே கட்சியில் அபே மணிக்கு இருந்த செல்வாக்கு மற்றும் அவரது கொலைக்கு பின்பு ஏற்பட்ட அனுதாபம் ஆகிய காரணங்களில் எதிர்பார்த்தபடி அவரின் தாயார் பேச்சியம்மாள் தேர்தலில் போட்டியிட திமுக தலைமை வாய்ப்பு வழங்கியுள்ளது. அதன்படி 35 வது வார்டில் திமுக சார்பில் பேச்சியம்மாள் போட்டியிடுகிறார்.

இதையொட்டி பேச்சியம்மாள் இன்று கட்சி நிர்வாகிகளுடன் சென்று பாளையங்கோட்டை மண்டல அதிகாரியிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். இதற்கிடையில் தற்போது வரை 35 வது வார்டில் பேச்சியம்மாளை தவிர வேறு யாரும் மனு தாக்கல் செய்யவில்லை. நாளையுடன் மனுத்தாக்கல் முடிவடையும் நிலையில், தொடர்ந்து யாரும் மனு தாக்கல் செய்யாத பட்சத்தில் பேச்சியம்மாள் போட்டியின்றி கவுன்சிலராக தேர்வு செய்யப்படும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

அதேபோல் பேச்சியம்மாள் வெற்றிபெறும் பட்சத்தில் அவருக்கு மண்டல குழு தலைவர் பதவி வழங்கவும் கட்சி தலைமை திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. ஒரு புறம் மகனை பறிகொடுத்த துக்கம் தீராவிட்டாலும், தனது மகனின் ஆசைப்படி தேர்தலில் வெற்றிபெற்று கவுன்சிலராக வேண்டும் என்ற நோக்கத்துடன் பேச்சியம்மாள் தேர்தலில் களம் காண்கிறார்.

Updated On: 4 Feb 2022 2:44 AM GMT

Related News

Latest News

  1. கல்வி
    அரசு கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்
  2. கலசப்பாக்கம்
    பருவதமலையில் புதிய இரண்டு இடி தாங்கிகள் பொருந்தும் பணி துவக்கம்
  3. வீடியோ
    தனிச்செயலாளர் மீது வழக்குப் பதிவு | Kejriwal-க்கு புதிய நெருக்கடி |...
  4. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  5. திருவண்ணாமலை
    அருணை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு...
  6. செய்யாறு
    மணல் கடத்தலை தடுக்க கண்காணிப்பு குழுக்கள்: கோட்டாட்சியர் அறிவிப்பு
  7. ஈரோடு
    பிரதமர் அலுவலக அதிகாரி போல் நடித்து ரூ.28 லட்சம் மோசடி: ஐடி நிறுவன...
  8. ஆரணி
    ஆரணியில் இயற்கை உணவு திருவிழா: ஏராளமான பொதுமக்கள் பங்கேற்பு
  9. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் வைகாசி மாதப் பெளா்ணமியில் கிரிவலம் வர உகந்த நேரம்...
  10. தமிழ்நாடு
    திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவில் தெப்பத்திருவிழா