பாளையங்கோட்டை ஆயிரத்தம்மன் கோவிலில் தசரா திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்
பாளையங்கோட்டையில் ஆயிரத்தம்மன் கோவிலில் கொடியேற்றத்துடன் தசரா திருவிழா தொடங்கியது.
பாளையங்கோட்டையில் ஆயிரத்தம்மன் கோவிலில் கொடியேற்றத்துடன் தசரா திருவிழா தொடங்கியது. பக்தர்கள் சாமி தரிசனம்.
தென்மாவட்டத்தில் புகழ்பெற்ற தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினத்திற்கு அடுத்தபடியாக, நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் தசரா திருவிழா மிகச் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். பாளையங்கோட்டையில் உள்ள ஆயிரத்தம்மன், உச்சிமாகாளி அம்மன், வண்ணாரப்பேட்டை உள்ள பேராட்சி அம்மன் உள்ளிட்ட 11 அம்மன் கோவில்களில் ஆண்டுதோறும் தசரா திருவிழா மிகச் சிறப்பாக நடைபெறும். இந்த ஆண்டு தசரா திருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவங்கியது.
பாளையங்கோட்டை ஆயிரத்தம்மன் கோவிலில் உள்ள கொடிமரத்தில் கொடியேற்றத்துடன் தசரா திருவிழா தொடங்கின. இதையொட்டி கொடிமரத்துக்கு சந்தனம், இளநீர் உள்ளிட்ட பல்வேறு அபிஷேகங்கள் செய்யப்பட்டன. இதேபோல் இன்று ஆயிரத்தம்மன் கோவிலிலும் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதையொட்டி திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். வருகிற 15-ஆம் தேதி தசரா திருவிழா நடைபெறுகிறது. பத்து நாட்களாக அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறும். இதையொட்டி 11 சப்பரங்கள் தெற்கு பஜாரில் உள்ள லூர்து நாதன் சிலை, பாளையங்கோட்டை கோபாலசாமி கோவில் முன்பு பாளையங்கோட்டை கட்டுப்பாட்டு அறை ஆகிய 3 இடங்களில் வரிசையாக நின்று சிறப்பு தீபாரதனை நடைபெறுவது வழக்கம்.
இதைத்தொடர்ந்து பாளையங்கோட்டை கட்டுப்பாட்டு அறை முன்பு நள்ளிரவில் சூரசம்ஹாரம் நடைபெறும். ஆனால் இந்த ஆண்டு கொரோனா தொற்றின் காரணமாக கோவிலில் உள்ள சப்பரங்கள் அனைத்தும் அந்த கோவில் வளாகத்தின் உள்ளேயே சுற்றும் என இந்து சமய அறநிலைத்துறை தெரிவித்துள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu