நெல்லையில் பள்ளி வாகனங்களில் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து ஆய்வு
திருநெல்வேலி ஆயுதப்படை மைதானத்தில் அதிகாரிகள் குழுவினர் பள்ளி வாகனங்களில் சோதனை செய்தனர்.
2022-23 கல்வி ஆண்டு வரும் 13ஆம் தேதி துவங்க உள்ள நிலையில் மாணவர்களை ஏற்றி செல்லும் வாகனங்களின் 16 பாதுகாப்பு அம்சங்கள் குறித்த சோதனை திருநெல்வேலி ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்றது.
2022-23 கல்வி ஆண்டு வரும் 13ஆம் தேதி துவங்குகிறது. அதற்கான முன்னேற்பாடாக உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின்படி பள்ளி மாணவர்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களின் பாதுகாப்பு குறித்த சோதனை ஆண்டுதோறும் நடைபெற்று வரும். இந்த கல்வி ஆண்டு வரும் 13ஆம் தேதி துவங்க உள்ள நிலையில், திருநெல்வேலி ஆயுதப்படை மைதானத்தில் பள்ளி மாணவர்களை ஏற்றி செல்லும் வாகனங்களில் சோதனை நடத்தப்பட்டது. காவல்துறை, வருவாய்த்துறை, தீயணைப்புத் துறை ஆகிய அதிகாரிகள் அடங்கிய குழுவினர் பள்ளி வாகனங்களில் சோதனை செய்தனர்.
குறிப்பாக அவசர வழி முதலுதவி சிகிச்சை உபகரணம் வாகனங்களின் படிகட்டுகள் தீயணைப்பு உபகரணங்கள் வாகனங்களில் அடித்தளம் உள்ளிட்ட 16 வகையான பாதுகாப்பு அம்சம் குறித்து சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் ஏதேனும் பாதுகாப்பு குறைபாடுகள் இருந்தால் அந்த வாகனங்கள் இயங்கு வதற்கு அனுமதி கொடுக்கப்பட்டது என்று கூறப்படுகிறது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள 135 பள்ளிகளைச் சேர்ந்த 511 வாகனங்கள் சோதனை நடத்தப்பட்டது. முன்னதாக பள்ளி மாணவர்களை ஏற்றி செல்லும் போது வாகனங்களில் தீ விபத்து ஏற்பட்டால் அதை எப்படி எதிர்கொள்வது, தீயை எப்படி அணைப்பது உள்ளிட்ட விளக்கங்கள் தீயணைப்பு துறை அலுவலர் வீரராஜ் தலைமையிலான தீயணைப்பு குழுவினர் செய்து காட்டினர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu