மேலப்பாளையத்தில் எஸ்.டி.டி.யூ தொழிற்சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு

மேலப்பாளையத்தில் எஸ்.டி.டி.யூ தொழிற் சங்கம் நெல்லை மாநகர் மாவட்ட செயற்குழு கூட்டம். புதிய நிர்வாகிகள் தேர்வு.

எஸ்.டி.டி.யூ தொழிற்சங்கம் நெல்லை மாநகர் மாவட்ட செயற்குழு கூட்டம் மேலப்பாளையம் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்ட செயலாளர் ஆட்டோ செய்யது வரவேற்புரை ஆற்றினார். சிறப்பு அழைப்பாளராக மாநில தலைவர் ஆசாத், மாநில பொதுச்செயலாளர் ரவூப் நிஸ்தார், எஸ்டிபிஐ கட்சி மாநகர் மாவட்ட துணை தலைவர் கனி, கலந்து கொண்டனர்,

கூட்டத்தில் தொழிற்சங்க வளர்ச்சி குறித்து விவாதிக்கப்பட்டது, வளர்ச்சியின் அடுத்த கட்டமாக புதிய மாவட்ட தலைவராக வழக்கறிஞர் ஆரிப் பாட்ஷா, மாவட்ட பொருளாராக சுல்தான் பாஷா , ஆட்டோ தொழிற்சங்க மாவட்ட தலைவராக செய்யது மைதீன், செயலாளராக பேட்டை ரசூல், துணை தலைவராக டவுண் கௌஸ், பொருளாளராக அபுபக்கர் சித்தீக் தேர்வு செய்யப்பட்டனர். லோடு ஆட்டோ சங்க தலைவராக சாகுல், செயலாளராக துரை, சாலை போக்குவரத்து டூரிஸ்ட் கார் ஓட்டுநர் சங்க தலைவராக முகைதீன் என்ற மதினா , செயலாளராக சிந்தா, உடல் உழைப்பு சங்க தலைவராக கல்வத், செயலாளராக புதுமனை சிந்தா, பீடி தொழிலாளர் சங்க தலைவராக மைதீன், தொழிலாளர் சங்க ஒருங்கிணைப்பாளராக மசூத் ஞானியார், மீன்சங்க தலைவராக மைதீன் பாட்ஷா,செயலாளராக சுறா சுல்தான் தேர்வு செய்யபட்டனர்.

கடும் மழையால் பாதிக்கப்பட்ட சாலைகள் போர்க்கால அடிப்படையில் சீர் அமைக்க வேண்டும், ஸ்மார்ட் சிட்டி பணிகளை துரித படுத்தவேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் முஸ்தபா,மசூத், மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர் இறுதியாக ஆட்டோ சங்க மாவட்ட செயலாளர் ரசூல் நன்றி உரை ஆற்றினார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!