/* */

நெல்லையில் மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில அளவிலான அமர்வு கைப்பந்து போட்டி

திருநெல்வேலி-கன்னியாகுமரி அணியினர் இடையே நடைபெற்ற போட்டியில் 25க்கு 21 என்ற புள்ளி கணக்கில் திருநெல்வேலி அணி வெற்றி பெற்றது.

HIGHLIGHTS

நெல்லையில் மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில அளவிலான அமர்வு கைப்பந்து போட்டி
X

திருநெல்வேலியில் மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில அளவிலான அமர்வு கைப்பந்து போட்டி நடைபெற்றது. 

திருநெல்வேலியில் மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில அளவிலான அமர்வு கைப்பந்து போட்டி நடைபெற்றது. இதில் தமிழகம் முழுவதும் இருந்து 16 ஆண்கள் அணிகள் பங்கேற்றனர்.

நெல்லை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல சங்கம் சார்பில் மாநில அளவிலான மாற்றுத்திறனாளிகளுக்கான அமர்வு கைப்பந்து போட்டிகள் நடைபெற்றது. வ.உ.சி உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற போட்டியில் தமிழகத்தில் இருந்து கோவை, மதுரை, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி, ராமநாதபுரம், சேலம் உள்ளிட்ட 16 ஆண்கள் அணியினர் பங்கேற்றனர். இரண்டு பிரிவுகளில் நடைபெறும் போட்டியானது நாக்-அவுட் முறையில் நடைபெறுகிறது. 2 நாட்கள் நடைபெறும் மாற்றுத்திறனாளிக்கான மாநில அளவிலான அமர்வு கைப்பந்து முதல் போட்டியில் திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி அணியினர் மோதினர். இந்த போட்டியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரவணன் துவக்கி வைத்தார்.

திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி அணியினர் இடையே நடைபெற்ற போட்டியில் 25க்கு 21 என்ற புள்ளி கணக்கில் திருநெல்வேலி அணி அபாரமாக வெற்றி பெற்றது. இரண்டாவது நாள் நடைபெறும் இறுதி போட்டியில் வெற்றி பெறும் முதல் அணியிருக்கு பத்தாயிரம் ரூபாய் பரிசுத் தொகையும், வெற்றி கோப்பையும் வழங்கப்பட உள்ளது. இரண்டாவது அணிக்கு எட்டாயிரம் ரூபாய் மற்றும் வெற்றி கோப்பையும் மூன்றாவது அணிக்கு 6,000 ரூபாய் மற்றும் வெற்றி கோப்பையை வழங்கப்பட உள்ளது. மாநில அளவில் மாற்றுத் திறனாளிகளுக்காக நடைபெற்ற அமர்வு கைப்பந்து போட்டியை ஏராளமான வீரர் வீராங்கனைகள் மற்றும் பொதுமக்கள் ஆர்வமுடன் பார்வையிட்டனர்.

Updated On: 9 April 2022 4:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?