/* */

ஸ்ரீஅழகியமன்னார் ராஜகோபாலசுவாமி கோவில் பங்குனி பிரம்மோற்சவ திருத்தோ் உலா

ஸ்ரீ அழகியமன்னார் ராஜகோபாலசுவாமி திருக்கோவிலில் பங்குனி பிரம்மோச்வசத்தை முன்னிட்டு திருத்தோ் உலா நடைபெற்றது.

HIGHLIGHTS

ஸ்ரீஅழகியமன்னார் ராஜகோபாலசுவாமி கோவில் பங்குனி பிரம்மோற்சவ திருத்தோ் உலா
X

ஸ்ரீ அழகியமன்னார் ராஜகோபாலசுவாமி திருக்கோவிலில் பங்குனி பிரம்மோச்வசத்தை முன்னிட்டு திருத்தோ் உலா நடைபெற்றது.

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை அருள்மிகு ஸ்ரீ வேதநாராயணர், ஸ்ரீ அழகியமன்னார் ராஜகோபாலசுவாமி திருக்கோவிலில் பங்குனி பிரம்மோற்சவத்தை முன்னிட்டு திருத்தோ் உலா. ஆயிரக்கணக்கான பக்தா்கள் கோவிந்தா, கோபாலா கோஷங்களுடன் தோ்வடம் பிடித்து இழுத்தனா்.

இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டிலுள்ள நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை இராஜகோபாலசுவாமி கோயில் 1000 ஆண்டுகள் பழமையானது. இத்திருக்கோவிலில் அஷ்டாங்க விமானத்தின் கீழ்சுதைச் சிற்பமாக சுவாமி ஸ்ரீதேவி பூதேவி சமேத அழகிய மன்னாரும், மூலஸ்தானத்தில் வேதவல்லி குமுதவல்லி சமேத வேதநாராயணரும், உற்சவராக ருக்மணி சத்யபாமா சமேத ராஜகோபாலா் என 3 நிலைகளில் பெருமாள் அருள்பாலிக்கின்றாா். சிறப்புகள் வாய்ந்த இத்திருக்கோவிலில் பங்குனி பிரம்மோற்சவம் வைகானச முறைப்படி கடந்த 10ம் தேதி கொடியேற்த்துடன் துவங்கி நடைபெற்று வருகின்றது. ஸ்ரீருக்மணி சத்யபாமா சமேத ஸ்ரீஇராஜகோபாலா் நாள்தோறும் பல்வேறு வாகனங்களில் வீத உலா வந்தாா்.

கடந்த 6 வருடங்களாக பிரம்மோஸ்தவத்தில் தேர் ஓடவில்லை, இதையடுத்து பக்தர்கள் புதிய தேர் செய்ய முடிவு செய்து கடந்த 2020 ஆம் ஆண்டு பூர்வாங்க பூஜைகள் ஆரம்பிக்கப்பட்டு ரூ 55 லட்சம் மதிப்பில் 36 அடி உயரம் 14 அடி அகலம் 35 டன் எடை கொண்ட 5அடுக்கு வேலைப்பாடுகளுடன் புதிய திருத்தோ் பணி முடிவடைந்தது. இதையடுத்து 10 ம் திருநாளான இன்று திருத்தோ் விழா சிறப்பாக நடைபெற்றது. இதற்காக காலை பெருமாள் தாயா்களுடன் தேருக்கு ஏழுந்தருளினாா். ஆழ்வாா் திருநகாி எம்பெருமானாா் ஜீயா் சுவாமிகள் எழுந்தருளி மங்களாசாசனம் செய்தாா். பொிய திருமொழி ஜீயா் சுவாமிகள் தலைமையில் பிரபந்த கோஷ்டியினரால் அருளப்பாடல் நடைபெற்றது.

மாநகர காவல் துணை ஆணையாளா் கொடிஅசைக்க ஆயிரக்கணக்கான பக்தா்கள் கோவிந்தா ஓடிவா, கோபாலா ஓடிவா என கோஷங்களுடன் திருத்தோ் வடம் பிடித்து இழுத்தனா். தேர் நிலையை வந்தடைந்ததும் பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை திருக்கோயில் நிர்வாகத்தினா் மற்றும் பக்தா்கள் செய்திருந்தனா்.

Updated On: 19 March 2022 7:20 AM GMT

Related News