நெல்லையில் போக்குவரத்து போலீசாருக்கு சோலார் தொப்பி, குளிர்பானம் வழங்கல்
நெல்லையில் போக்குவரத்து காவலர்களுக்கு மாநகர ஆணையாளர் சோலார் தொப்பி மற்றும் குளிர் பானங்களை வழங்கினார்.
நெல்லை மாநகர போக்குவரத்து காவலர்களுக்கு கோடை வெயிலின் தாக்கத்தை குறைக்கும் வகையில் சோலார் தொப்பி மற்றும் குளிர்பானங்களை நெல்லை மாநகர காவல் ஆணையாளர் வழங்கினார்.
தமிழகத்தில் தற்போது கோடைகாலம் துவங்கியுள்ள நிலையில், நெல்லை மாநகர போக்குவரத்து காவல்துறையினருக்கு கோடை வெயிலின் தாக்கத்தை போக்கும் வகையில் நெல்லை மாநகர காவல்துறை ஆணையர் துரைக்குமார் சாலைகளில் பணியாற்றும் போக்குவரத்து காவலர்களுக்கு குளிர்பானம் வழங்கும் நிகழ்வை துவக்கி வைத்ததோடு, மேலும் வெப்பத்தை தாங்க கூடிய சோலார் தொப்பிகளை வழங்கினார். கோடை வெப்பத்தை தணிக்க குளிர்பானம் வழங்கி போக்குவரத்து காவலர்களுக்கு அறிவுரைகள் வழங்கினார்.
அப்போது போக்குவரத்து துறை காவலர்களிடம் எங்களைப்போன்ற அதிகாரிகள் அறையிலிருந்து பணி புரிந்து வருகிறோம். நீங்கள் தான் சாலைகளில் மக்களோடு மக்களாக பணியாற்றி வருகின்றீர்கள். பொதுமக்களிடம் காவல்துறையில் முகமாக நீங்கள் தான் செயல்பட்டு வருகின்றனர். அதனால் பொதுமக்களோடு நீங்கள் நல்ல உறவை மேற்கொள்ள வேண்டும் என அறிவுரை வழங்கினார். இந்த நிகழ்வில் நெல்லை மாநகர கிழக்கு காவல் துணை ஆணையாளர் T.P.சுரேஷ்குமார் உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu