நெல்லை மாநகர காவல் ஆணையாளர் தலைமையில் சமூக நீதி நாள் உறுதிமொழி

நெல்லை மாநகர காவல் ஆணையாளர் தலைமையில் சமூக நீதி நாள் உறுதிமொழி.
நெல்லை மாநகர காவல் ஆணையாளர் தலைமையில் சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்பு நிழ்ச்சி நடைபெற்றது.
நெல்லை மாநகர காவல் ஆணையாளர் முனைவர் N.K.செந்தாமரைக் கண்ணன் தலைமையில், சட்டம் மற்றும் ஒழுங்கு காவல் துணை ஆணையாளர் T.P.சுரேஷ்குமார், CWC கூடுதல் காவல் துணை ஆணையாளர் K.சங்கர், நுண்ணறிவு பிரிவு காவல் உதவி ஆணையாளர் நாகசங்கர், அலுவலக பணியாளர்கள் மற்றும், காவல் ஆளிநர்கள் ஒன்றிணைந்து மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் சமூக நீதி நாள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
அப்போது காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவல் துறை அலுவலர்கள் அனைவரும் சமத்துவம், சகோதரத்துவம், சமதர்மம், மானுடப் பற்றும், மனிதாபிமானமும் ஒன்றே எனது இரத்த ஓட்டமாக அமையும். சமூக நீதியையே அடித்தளமாகக் கொண்ட சமுதாயம் அமைக்கும் எனது பயணத்தை தொடர்வோம் என அனைவரும் சமூக நீதி நாள் உறுதிமொழி எடுத்துக் கொண்டார்கள்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu