நெல்லையில் புத்தக திருவிழாவிற்கான அரங்கு அமைக்கும் பணி: வருவாய் அலுவலர் ஆய்வு

நெல்லையில் புத்தக திருவிழாவிற்கான அரங்கு அமைக்கும் பணி: வருவாய் அலுவலர் ஆய்வு
X

நெல்லையில் நடைபெறவுள்ள புத்தகத் திருவிழாவிற்கான அரங்குகள் அமைக்கும் பணிகளை மாவட்ட வருவாய் அலுவலர் ஆ.பெருமாள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் வருகிற 17 முதல் 27ம் தேதி வரை பாளையங்கோட்டை வஉசி மைதானத்தில் புத்தகத் திருவிழா நடத்தப்படவுள்ளது.

திருநெல்வேலி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில், வருகின்ற 17.03.2022 முதல் 27.03.2022 வரை நடைபெறவுள்ள பொருநை நெல்லைப் புத்தகத் திருவிழா-2022, அரங்குகள் அமைக்கும் பணிகளை மாவட்ட வருவாய் அலுவலர் ஆ.பெருமாள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தமிழ் இலக்கிய எழுத்தாளர்கள் பலரையும், சாகித்திய அகாடமி விருதாளர்களையும் உருவாக்கிய திருநெல்வேலி மாவட்டத்தில், மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் வருகிற 17-03-2022 முதல் 27-03-2022 வரை பாளையங்கோட்டை வ.உ.சி மைதானத்தில், ஐந்தாவது புத்தகத் திருவிழா நடத்தப்படவுள்ளது. இம்மைதானத்தில் அரங்குகள் அமைப்பதற்கு நடைபெற்று வரும் பணிகளை மாவட்ட வருவாய் அலுவலர் ஆ.பெருமாள் பார்வையிட்டு இன்று (11.03.2022) ஆய்வு செய்தார்.

இந்த அரங்குகளில் தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கத்தின் (பபாசி) சார்பில் 100-க்கும் மேற்பட்ட புத்தகப் பதிப்பாளர்கள் பங்கேற்கவுள்ளனர். இதில் கலை, இலக்கியம், சமூக நாவல்கள், வரலாற்று நாவல்கள், தன்னம்பிக்கை மற்றும் சுயமுன்னேற்றத்திற்கான புத்தகங்கள், அரசுத் துறைகளில் வேலைவாய்ப்பிற்கான வழிகாட்டும் புத்தகங்கள் போன்ற பல இலட்சக்கணக்கான புத்தகங்கள் ஒரே இடத்தில் கிடைக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்படவுள்ளன. அனைத்து புத்தகங்களுக்கும் 10 சதவிகித தள்ளுபடியில் விற்பனை செய்யப்படும். சுற்றுச்சூழல் பாதுகாப்பை கருத்தில் கொண்டு "நெகிழி இல்லா" (Plastic Free) புத்தகத் திருவிழாவாக நடத்திட முடிவு செய்யப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை மாற்றத்தினை எதிர்கொள்வது குறித்து விழப்புணர்வு ஏற்படுத்திடும் வகையில் "நெல்லை நீர்வளம் - தூய பொருநை நெல்லைக்குப் பெருமை" என்ற தலைப்பில் அரங்குகள் அமைக்கவும், பல்வேறு கருத்தரங்குகள் நடத்திடவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மேலும் நாட்டுப்புற கலைகளை உலகறியச் செய்யும் வகையில் நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகளும், இலக்கியம், வரலாறு மற்றும் பண்பாடு ஆகியவற்றை விளக்கும் வகையில் தலைசிறந்த பேச்சாளர்களின் சிறப்புரைகளும் நாள்தோறும் நடைபெறும். இப்புத்தகத் திருவிழாவை காணவரும் மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்குத் தேவையான பாரம்பரிய உணவுகளை வழங்கிட உணவகங்கள் அமைக்கப்படவுள்ளன.

இத்திருவிழாவில் கலந்து கொள்ளும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் பயன் பெறும் வகையில் கைத் தொழில்கள் மற்றும் கலைகள் தொடர்பான பயிற்சி பட்டறைகள், கலை இலக்கிய போட்டிகள், பிரபல எழுத்தாளர்களுடன் நேரடியான உரையாடல்கள், சிறுவர் இலக்கியம் படைத்தல், விளையாட்டுத் துறையில் பல்வேறு சாதனைகள் புரிந்த வீரர்களையும், தொழில்துறையில் சாதனை புரிந்தவர்களையும், சிறந்த தொழில் முனைவோர்களையும் நேரில் சந்தித்து கலந்துரையாடுதல், காட்சி-ஊடக மாணவர்கள; (Visual Communication) பயன்பெறும் வகையில் குறும்படங்களை உருவாக்கிட (Digital Movie making) பயிற்சி எடுத்தல் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.

மேலும், தமிழக அரசு பல்வேறு துறைகள் வாயிலாக செயல்படுத்தி வரும் முக்கிய திட்டங்களான மக்களைத்தேடி மருத்துவம் திட்டம், இல்லம் தேடிக் கல்வி திட்டம், வருமுன் காப்போம் திட்டம் போன்ற தமிழ்நாடு அரசின் பல்வேறு திட்டங்களின் பயன்கள் குறித்து பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் பார்த்து பயன்பெறும் வகையில் பல்வேறு சிறப்பு அரங்கங்களும் அமைக்கப்படவுள்ளன. இந்த ஆய்வின்போது மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) எம்.கணேஷ்குமார், திருநெல்வேலி கோட்டாட்சியர் சந்திரசேகர், வட்டாட்சியர் (பேரிடர் மேலாண்மை) செல்வன், துணை வட்டாட்சியர் மாரிராஜ், நூலகர் (ஓய்வு) முத்துகிருஷ்ணன், எழுத்தாளர் நாரம்பூநாதன், மையம் ரமேஷ், மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

Tags

Next Story
சிறுநீரகத்துல நச்சுக்கள் இருக்கா ?..உடனே வெளியேற்ற இந்த சில பழங்கள சாப்டுங்க..!| Best fruits for kidney cleansing naturally in tamil