பாளையங்கோட்டை அரசு அருங்காட்சியகத்தில் பெண் வன்கொடுமை கருத்தரங்கம்

பாளையங்கோட்டை அரசு அருங்காட்சியகத்தில் பெண் வன்கொடுமை கருத்தரங்கம்
X

பாளையங்கோட்டை அரசு அருங்காட்சியகத்தில் பெண் வன்கொடுமை தொடர்பான கருத்தரங்கம் நடைபெற்றது.

பாளையங்கோட்டை அரசு அருங்காட்சியகத்தில் பெண் வன்கொடுமையில் இருந்து எவ்வாறு எதிர் கொள்வது குறித்த கருத்தரங்கம்.

அரசு அருங்காட்சியகத்தில் பெண் வன்கொடுமை தொடர்பான கருத்தரங்கம் நடைபெற்றது.

நெல்லை அரசு அருங்காட்சியகமும், திருநெல்வேலி மாவட்ட சமூகநலத்துறை மற்றும் பிஎஸ்என் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் கணினி துறையும் இணைந்து பெண் வன்கொடுமை தொடர்பான கருத்தரங்கினை நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் நடத்தினர்.

இக்கருத்தரங்கில் நெல்லை அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் சிவ.சத்திய வள்ளி தலைமையுரை ஆற்றினார். பி.எஸ்.என். கல்லூரி கணினி துறை தலைவர் முனைவர். வர்கீஸ் மற்றும் பேராசிரியர் முனைவர். நல்லசிவன் வாழ்த்துரை வழங்கினார். திருநெல்வேலி மாவட்ட சமூக நலத்துறை பாதுகாப்பு அலுவலர் வனிதா பெண் வன்கொடுமை பற்றியும், அவற்றை எதிர்கொள்வது தொடர்பான சட்ட மசோதாக்கள் பற்றியும் விரிவாக எடுத்துரைத்தார்.

அதனைத் தொடர்ந்து சமூக நலத்துறையில் அளிக்கப்படும் திட்டங்கள் பற்றியும் மாணவிகளின் கேள்விகளுக்கு பதிலளித்தார். நிகழ்வில் பிஎஸ்என் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியின் மாணவிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்வில் கலை ஆசிரியை சொர்ணம் மற்றும் கவிஞர். சுப்பையா ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்