குடியரசு தினத்தை முன்னிட்டு எஸ்.டி.பி.ஐ கட்சி மாநில தலைவர் வாழ்த்து
எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக்.
குடியரசைக் காப்பாற்ற ஒன்றுபடுவோம்!. எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள குடியரசு தின வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது;
பல தியாகங்களும், துயரங்களும் நிறைந்த 200 ஆண்டுகால நெடிய சுதந்திர போராட்டத்தின் பலனாக கிடைத்த சுதந்திரத்திற்கு பிறகு மக்களாட்சி மட்டுமே ஒரு நாட்டின் சிறப்பான வளர்ச்சிக்கு அடையாளம் எனக் கருதி, டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் தலைமையில் இந்திய அரசியல் சட்டம் நிறைவேற்றப்பட்டு, 1950 ஜனவரி 26 முதல் நடைமுறைக்கு வந்த நாளை குடியரசு தினமாக நாம் கொண்டாடி வருகின்றோம்.
அதன்படி நாட்டின் சுதந்திர தின பவளவிழா ஆண்டில், ஜனவரி 26 ல் இந்திய தேசத்தின் 73வது குடியரசு தினத்தை நாம் கொண்டாடிக் கொண்டிருக்கின்றோம். எஸ்.டி.பி.ஐ. கட்சியின் சார்பாக நாட்டு மக்கள் அனைவருக்கும் இனிய குடியரசு தின நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன்.
நம் இந்திய தேசத்தின் பெருமைகளாக கூறிக்கொள்ள பல விஷயங்கள் இருந்தாலும், நமது தேசத்தின் பன்முகத் தன்மை ஒட்டுமொத்த உலகத்தையும் திரும்பிப் பார்க்கச் செய்கிறது. நமது தேசத்தில் நிலவிவரும் வேற்றுமையில் ஒற்றுமை என்ற ஒருமைப்பாட்டு உணர்வானது உலகிற்கே முன்னுதாரணமாக உள்ளது. இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu