கேரள நிர்வாகி படுகொலையை கண்டித்து நெல்லையில் எஸ்.டி.பி.ஐ. கட்சி ஆர்ப்பாட்டம்

கேரள நிர்வாகி படுகொலையை கண்டித்து நெல்லையில் எஸ்.டி.பி.ஐ. கட்சி ஆர்ப்பாட்டம்
X

மேலப்பாளையத்தில் மாவட்ட செயலாளர் பர்கிட் அலாவுதீன் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

எஸ்டிபிஐ கட்சியின் கேரள மாநில செயலாளர் படுகொலையை கண்டித்து நெல்லை மேலப்பாளையத்தில் எஸ்.டி.பி.ஐ. கட்சி ஆர்ப்பாட்டம்.

எஸ்டிபிஐ கட்சியின் கேரள மாநில செயலாளர் கே.எஸ்.ஷானின் படுகொலையை கண்டித்து நெல்லையில் எஸ்.டி.பி.ஐ. கட்சி ஆர்ப்பாட்டம்.

எஸ்டிபிஐ கட்சியின் கேரள மாநிலச் செயலாளர் கே.எஸ்.ஷான் ஆலப்புழாவில் உள்ள மண்ணஞ்சேரியில் வைத்து பயங்கரவாதிகளால் நேற்று இரவு படுகொலை செய்யப்பட்டார். பயங்கரவாதிகளின் இந்த படுகொலையை கண்டித்தும், கொலையில் தொடர்புடைய அனைத்து பயயங்கரவாதிகளையும் கேரள அரசு கைது செய்ய வலியுறுத்தியும், பயங்கரவாத வன்முறை வெறியாட்டத்தை கட்டுப்படுத்த வலியுறுத்தியும், தமிழகம் முழுவதும் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.

அதன் ஒருபகுதியாக நெல்லை மாநகர் மாவட்டம் சார்பாக மேலப்பாளையத்தில் மாவட்ட செயலாளர் பர்கிட் அலாவுதீன் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநகர் மாவட்ட தலைவர் சாகுல் ஹமீது உஸ்மானி, மாநகர் மாவட்ட செயலாளர் பேட்டை முஸ்தபா, வேளாண் அணி மாநில தலைவர் சேக் அப்துல்லா கண்டன உரை ஆற்றினர். மாவட்ட, தொகுதி, பகுதி, நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

கண்டன ஆர்ப்பாட்டத்தில் கொலையாளிகள் அனைவரையும் கைது செய்ய கோரி கோசங்கள் எழுப்பப்பட்டது.

Tags

Next Story
மாஜி அதிமுக பொறுப்பாளர் வாபஸ், செந்தில்முருகன் விளக்கம்