ஊரக உள்ளாட்சி தேர்தல்: நெல்லையில் அதிமுக வேட்பாளர்கள் ஆலோசனை கூட்டம்

ஊரக உள்ளாட்சி தேர்தல்: நெல்லையில் அதிமுக வேட்பாளர்கள் ஆலோசனை கூட்டம்
X

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை ஒன்றிய ஊரக உள்ளாட்சி தேர்தல் வேட்பாளர்கள் அறிமுகம் மற்றும் தேர்தல் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை ஒன்றிய ஊரக உள்ளாட்சி தேர்தல் வேட்பாளர்கள் அறிமுகம் மற்றும் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை ஒன்றிய ஊரக உள்ளாட்சி தேர்தல் வேட்பாளர்கள் அறிமுகம் மற்றும் தேர்தல் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

பாளையங்கோட்டை ஒன்றிய ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் அறிமுகம் மற்றும் ஆலோசனை கூட்டம் கிருஷ்ணாபுரத்தில் உள்ள மண்டபத்தில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு திருநெல்வேலி மாவட்ட கழக செயலாளர் தச்சை-கணேசராஜா தலைமை தாங்கினார். பாளையங்கோட்டை வடக்கு ஒன்றிய கழக செயலாளர் மருதூர் ராமசுப்பிரமணியன் முன்னிலை வகித்தார்.

கழக அமைப்பு செயலாளர் தளவாய் சுந்தரம் MLA, கழக அமைப்பு செயலாளர் கருப்பசாமி பாண்டியன் EX.MLA ஆகியோர் கூட்டத்தில் கலந்து கொண்டு உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆலோசனை வழங்கினார்கள்.

இக்கூட்டத்தில் தலைமை கழக நிர்வாகிகள், தேர்தல் பொறுப்பாளர்கள், மாவட்ட கழக நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள், ஒன்றிய, நகர, கிளை கழக நிர்வாகிகள் மற்றும் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கொல்லிமலையில் மலைவாழ் மக்கள் தார் சாலை அமைக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்..!