நெல்லை மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் ரூ.34.55 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவி
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் ரூ.34.55 இலட்சம் மதிப்பில் 58 நபர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் வே.விஷ்ணு வழங்கினார்.
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் ரூ.34.55 இலட்சம் மதிப்பில் 58 நபர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் வே.விஷ்ணு வழங்கினார்.
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளர்ச்சிமன்ற கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் ரூ.34.55 இலட்சம் மதிப்பில் 58 நபர்களுக்கும், பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் வே.விஷ்ணு வழங்கினார்கள். இக்கூட்டத்தில், பொதுமக்களிடம் இருந்து மாற்றுத்திறனாளிகள் உதவித்தெகை, முதிர்கன்னி உதவித்தொகை, விபத்துமரண உதவித்தொகை, இலவச வீட்டுமனை பட்டா, பட்டா மற்றும் பட்டா மாறுதல் வேலைவாய்ப்பு, மற்றும் குடிநீர், சாலை வசதிகள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பான சுமார் 350க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டது. இம்மனுக்களை மாவட்ட ஆட்சித் தலைவர் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் ஒப்படைத்து மனுக்களை பரிசீலனை செய்ய உரிய நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் உத்தரவிட்டார்.
மேலும் முதலமைச்சரின் தனிப்பிரிவுகள் மனுக்கள் மீது தனிக்கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் வே.விஷ்ணு அறிவுறுத்தினார். முன்னதாக மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்திற்கு மனு அளிக்க வந்த. மாற்றுத்திறனாளிகளை இருக்கையில் அமரவைத்து அவர்களது இருக்கைக்கு சென்று அவர்களது கோரிக்கைகளை கனிவுடன் கேட்டறிந்து கோரிக்கை மனுக்களை பெற்றுகொண்டு மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு.மாவட்ட ஆட்சித்தலைவர் உத்தரவிட்டாரர்.
மாவட்ட அளவில் கலைபண்பாட்டுத்துறையின் மூலம் நடத்தப்பட்ட கலைப் போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற 15 நபர்களுக்கு ஊக்கத்தொகைக்கான காசசோலைகள் வழங்கப்பட்டது. இதில் குரலிசை, கருவியிசை பரதநாட்டியம், கிராமிய நடனம், ஓவியம் போன்ற போட்டிகள் நடத்தப்பட்டு முதல் மூன்று இடத்தை பிடித்த நபர்களுக்கு முதல் பரிசாக தலா ரூ.6500/-க்கான காசோலையும், இரண்டாம் பரிசாக தலா ரூ.4500/-க்கான காசோலையும், மூன்றாம் பரிசாக தலா ரூ.3500/- க்கான காசோலையும் என மொத்தம் 15 நபர்களுக்கு ரூ.70000/- க்கான காசோலைகள் வழங்கப்பட்டது. மேலும், நாட்டுப்புற கலைஞர் நல வாரியத்தின் மூலம் 7 கலைஞர்களுக்கு ரூ. 10000 மதிப்பில் மூக்குக் கண்ணாடிகளும், 15 நபர்களுக்கு ரூ.29,500 மதிப்பில் கல்விநிதியுதவிகளும், 1 நபருக்கு ரூ.5000 மதிப்பில் திருமண நிதியுதவியும், 4 நபர்களுக்கு ரூ.85000 மதிப்பில் ஈமசடங்கு/இயற்கை மரணம் நிதியுதவியும் ஆக மொத்தம் 27 நபர்களுக்கு ரூ.1.29 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் வழங்கினார்.
முன்னதாக மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் தாட்கோ மூலம் தொழில்முனைவோர் திட்டத்தின்கீழ் விக்கிரமசிங்கபுரம் - மைலார் காணிகுடியிருப்பில் உள்ள காணி பழங்குடியின மக்கள் 15 நபர்களுக்கு மரவள்ளிக்கிழங்கு சாகுபடி மற்றும் சிப்ஸ் விற்பனை செய்யும் தொழில் தொடங்குவதற்கான மானியத்துடன் கூடிய கடனுதவியும், நான்குநேரி வட்டம், பொத்தையடி கிராமத்தை சார்ந்த பழங்குடியின நபருக்கு கான்கிரீட் கலவை இயந்திரம் வாங்கி தொழில் செய்வதற்கும் என மொத்தம் 16 பழங்குடியின பயனாளிகளுக்கு ரூ. 32.56 இலட்சம் மதிப்பிலான தொழில் தொடங்குவதற்கான கடனுதவிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் வழங்கினார். இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ஆ.பெருமாள், சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் குமாரதாஸ், ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் தியாகராஜன் தாட்கோ மேலாளர் ஜெ.விஜயா, உட்பட அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu