மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு வங்கி கடன் மற்றும் நலத்திட்ட உதவி வழங்கல்

மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு வங்கி கடன் மற்றும் நலத்திட்ட உதவி வழங்கல்
X

மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.63.07 கோடி மதிப்பில் வங்கிக் கடன் மற்றும் நலத்திட்ட உதவிகளை சபாநாயகர் மு.அப்பாவு வழங்கினார்.

மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு ரூ.63.07 கோடி மதிப்பில் வங்கிக் கடன் மற்றும் நலத்திட்ட உதவிகளை சபாநயாகர் மு.அப்பாவு வழங்கினார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருவள்ளுர் மாவட்டம் திருத்தனியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு வங்கிக் கடன் மற்றும் நலத்திட்ட உதவிகளை இன்று வழங்கினார். அதனைத் தொடர்ந்து திருநெல்வேலி மாவட்டத்தில் 1001 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.63.07 கோடி மதிப்பில் வங்கிக் கடன் மற்றும் நலத்திட்ட உதவிகளை தமிழ்நாடு சட்டமன்ற பேரவைத் தலைவர் மு.அப்பாவு வழங்கினார்.

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை நூற்றாண்டு மண்டபத்தில் 1001 மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு ரூ. 63.07 கோடி மதிப்பில் வங்கிக் கடன் மற்றும் நலத்திட்ட உதவிகளை தமிழ்நாடு சட்டமன்ற பேரவைத் தலைவர் மு.அப்பாவு, மாவட்ட ஆட்சித்தலைவர் வே.விஷ்ணு, பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் மு.அப்துல் வகாப், முன்னாள் சட்டப்பேரவைத் தலைவர் இரா.ஆவுடையப்பன் ஆகியோர் முன்னிலையில் இன்று (14.12.2021) வழங்கினார்.

தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சுய உதவிக் குழு இயக்கத்தை மாநிலம் முழுவதும் பரவலாக்கி, கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதார மேம்பாடு மற்றும் சுய சார்புதன்மை மூலம் பெண்களின் நிலையை மேம்பாடு அடையச் செய்யும் நோக்கத்துடன் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் மற்றும் தமிழ்நாடு ஊரகப் புத்தாக்கத் திட்டம் ஆகிய மூன்று முக்கிய திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

இந்தியாவிலேயே முதல்முறையாக தமிழக அரசு 1989 ஆம் ஆண்டு தர்மபுரி மாவட்டத்தில் பன்னாட்டு வேளாண்மை வளர்ச்சி நிதி (IFAD) உதவியுடன் வேளாண் சார்ந்த தொழில்களில் ஈடுபட்டிருந்த மகளிரைக் கொண்டு மகளிர் மேம்பாட்டுத் திட்டத்தின் மூலம் சுய உதவிக் குழுக்களை அமைக்கத் தொடங்கியது. மகளிரின் முன்னேற்றத்திற்காக முத்தமிழ் அறிஞர் கலைஞரின் தொலைநோக்குப் பார்வையில் துவங்கப்பட்ட இத்திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு தற்போது சமூக, பொருளாதார மேம்பாட்டை அடைவதற்கு மகளிரைக் கொண்டு சுய உதவிக் குழுக்கள் மற்றும் கூட்டமைப்புகளை உருவாக்கி, முறையான பயிற்சிகள் வழங்கி, வருமானம் ஈட்டும் தொழில் தொடங்க வங்கிக் கடன் இணைப்புகள் ஏற்படுத்தி சுய உதவிக் குழு இயக்கத்தை வலுப்படுத்தி வருகிறது.

தற்போது நலிவுற்றோரை ஒருங்கிணைத்து சிறப்புக் குழுக்களும், மாற்றுத் திறனாளிகள் மற்றும் முதியோர்களைக் கொண்ட குழுக்களும் அமைக்கப்பட்டு வருகின்றன. இதுவரை சுமார் 7 இலட்சத்து 22 ஆயிரம் குழுக்களுக்கு, ஒரு இலட்சத்து நான்காயிரத்து பதிமூன்று கோடி ரூபாய் வங்கிக் கடனாக வழங்கப்பட்டு, ஏழை எளிய மக்களின் பொருளாதார முன்னேற்றத்திற்கு வழி செய்யப்பட்டுள்ளது.

Tags

Next Story
வாட்ஸ்அப், ஸ்கைப் மோசடிகள்: டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி விழிப்புணர்வு