நெல்லை ஆடு, மாடுகள் விற்பனை சந்தையில் உரிமையாளர்கள் போராட்டம்

நெல்லை ஆடு, மாடுகள் விற்பனை சந்தையில் உரிமையாளர்கள் போராட்டம்
X

திருநெல்வேலி கால்நடை சந்தை

மேலப்பாளையத்தில் உள்ள ஆடு, மாடுகள் விற்பனை சந்தையில் நுழைவு கட்டணம் உயர்த்தப்பட்டதால் உரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்

நெல்லை மாநகராட்சிக்கு உட்பட்ட மிகவும் பிரபலமான ஆடு. மாடு விற்கும் சந்தை மேலப்பாளையத்தில் உள்ளது. சந்தையின் உள்ளே விற்பனை செய்ய அனுமதிப்பதற்கு ஆடுகளுக்கு ஒரு விலையும், மாடுகளுக்கு ஒரு விலையும் என நிர்ணயம் செய்து வசூல் செய்து வந்தனர்.

இந்நிலையில் திடீரென மாநகராட்சி நிர்வாகம் அந்த அனுமதி சீட்டு விலை ஏற்றம் செய்ததன் காரணமாக மாடு விற்பனையாளர்கள் அதிருப்தி அடைந்தனர். ஆடு, மாடு உரிமையாளர்கள் விலை ஏற்றம் செய்தால் மிகத் தொலைவிலிருந்து வரும் எங்களுக்கு இந்த கட்டணம் மிகவும் அதிகப்படியானது ஏற்புடையதல்ல என மாநகராட்சி ஊழியர்களிடம் வாக்குவாதம் செய்து தர்ணாவில் ஈடுபட்டனர்.

மேலும் இச்சந்தையில் அடிப்படை தேவைகள் பூர்த்தி செய்யும் அளவுக்கு எந்த வசதியும் இல்லை எனவும் மிகவும் வருத்தத்துடன் மாடு உரிமையாளர்கள் வருத்தத்துடன் தெரிவித்துனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!