ஜிமிக்கி கம்மல் பாடலுக்கு நடனமாடி மாணவர்களை வரவேற்ற தனியார் பள்ளி ஆசிரியைகள்

ஜிமிக்கி கம்மல் பாடலுக்கு நடனமாடி மாணவர்களை வரவேற்ற தனியார் பள்ளி ஆசிரியைகள்
X

பாளையங்கோட்டையில் உள்ள கிறிஸ்துராஜா தனியார் பள்ளியில் நடனமாடி மாணவர்களை உற்சாகப்படுத்திய ஆசரியைகள்.

நெல்லையில் ஜிமிக்கி கம்மல் பாடலுக்கு நடனமாடி மாணவர்களை வரவேற்ற தனியார் பள்ளி ஆசிரியைகள் வீடியோ பெரும் வைரலாகி வருகிறது.

தமிழ்நாட்டில் சுமார் 19 மாதங்களுக்கு பிறகு ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு நேற்று பள்ளிகள் திறக்கப் பட்டது. இருப்பினும் மழை காரணமாக நெல்லை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டதால் இன்று இரண்டாம் தேதி 8 8ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு நெல்லையில் பள்ளிகள் திறக்கப்பட்டது.

மாவட்டம் முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகள் என மொத்தம் 1500 பள்ளிகள் இன்று திறக்கப்பட்டது. நீண்ட மாதங்களுக்குப் பிறகு பள்ளிக்குச் சென்றதால் மாணவர்கள் உற்சாகத்துடன் வந்தனர். இந்த சூழ்நிலையில் நெல்லையில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியைகள் சினிமா பாடலுக்கு நடனமாடி மாணவர்களை வரவேற்ற சம்பவம் நெகிழ்ச்சி ஏற்படுத்தியுள்ளது.

அதாவது நெல்லை பாளையங்கோட்டையில் உள்ள கிறிஸ்துராஜா தனியார் பள்ளியில் சுமார் 500 மாணவ-மாணவிகள் எட்டாம் வகுப்பு வரை பயின்று வருகின்றனர். இன்று முதல் பள்ளி திறக்கப்பட்டதும் மாணவர்கள் அனைவரும் மிகுந்த உற்சாகத்துடன் வந்திருந்தனர். அவர்களுக்கு மேலும் உற்சாகம் அளிக்கும் வகையில் திடீரென பள்ளி ஆசிரியைகள் மேடையில் ஏறி மலையாள சினிமாவில் புகழ்பெற்ற பாடலான ஜிமிக்கி கம்மல் பாடலுக்கு நடனம் ஆடி வரவேற்றனர். பதிலுக்கு மாணவர்களும், ஆசிரியர்களுடன் இணைந்து ஜிமிக்கி கம்மல் பாடலுக்கு உற்சாக நடனமாடி மகிழ்ச்சி அடைந்தனர்.

நீண்ட இடைவேளைக்கு பிறகு பள்ளிகள் திறக்கப்பட்டிருந்தால் ஆசிரியைகளின் இந்த செயல் மாணவர்களுக்கு ஒரு வித புத்துணர்ச்சியை ஏற்படுத்தும் விதமாக அமைந்த்து. இதற்கிடையில் ஆசிரியைகள் நடனமாடி மாணவர்களை வரவேற்ற வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

Tags

Next Story