பாளையங்கோட்டை பகுதிகளில் நாளை மின்தடை - மின் வாரியம் அறிவிப்பு

பாளையங்கோட்டை பகுதிகளில் நாளை மின்தடை - மின் வாரியம் அறிவிப்பு
X
பாளையங்கோட்டை பகுதியில் நாளை மின் தடை ஏற்படக் கூடிய பகுதிகள் குறித்து திருநெல்வேலி செயற்பொறியாளர் வெளியிட்டுள்ள அறிக்கை

பாளையங்கோட்டை பகுதிகளில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள் குறித்து மின் வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

திருநெல்வேலி பாளையங்கோட்டை பகுதியில் நாளை 13 ம் தேதி (செவ்வாய்க்கிழமை) மின் தடை ஏற்படக் கூடிய பகுதிகள் குறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் திருநெல்வேலி செயற்பொறியாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில்... சமாதானபுரம் துணை மின் பகிர்மான நிலையத்தில் உள்ள காமராஜர் நகர் மின் பாதையில் 13 ஆம் தேதி செவ்வாய்க்கிழமையன்று நெடுஞ்சாலைத்துறை திருச்செந்தூர் சாலை விரிவாக்கப் பணிகள் காரணமாக மின் கம்பம் மற்றும் மின் பாதை மாற்றி அமைக்கும் பணி நடைபெற உள்ளது.

அதனால் அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் வினியோகம் இருக்காது. மேற்கண்ட பணிகள் நடைபெற ஒத்துழைப்பு நல்கும்படி அறிக்கையில் பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளார்.

மின்தடை ஏற்படும் பகுதிகள் காமராஜர்நகர், நீதிமன்ற எதிர் பகுதி, சங்கர்காலனி, செண்பகம்காலனி, எம்.கே.பி நகர், மற்றும் திருச்செந்தூர் சாலை, சமாதானபுரம் முதல் நீதிமன்றம் வரை, என அவர் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!