பொருநை நெல்லை புத்தக திருவிழா: சபாநாயகர் அப்பாவு துவக்கி வைப்பு

பொருநை நெல்லை புத்தக திருவிழா: சபாநாயகர் அப்பாவு துவக்கி வைப்பு
X

திருநெல்வேலியில் 5வது பொருநை நெல்லை புத்தக திருவிழாவை தமிழ்நாடு சட்டமன்ற பேரவை தலைவர் மு.அப்பாவு இன்று திறந்து வைத்தார்.

நெல்லை வ.உ.சி. மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள 5வது பொருநை நெல்லை புத்தக திருவிழாவினை சபாநாயகர் அப்பாவு திறந்து வைத்தார்.

திருநெல்வேலியில் 5வது பொருநை நெல்லைப் புத்தகத் திருவிழாவினை தமிழ்நாடு சட்டமன்ற பேரவைத் தலைவர் மு.அப்பாவு இன்று திறந்து வைத்தார்.

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை வ.உ.சி மைதானத்தில், மாவட்ட நிர்வாகம் மற்றும் பபாசி நிறுவனமும் இணைந்து அமைக்கப்பட்டுள்ள 5வது பொருநை நெல்லைப் புத்தகத் திருவிழாவினை தமிழ்நாடு சட்டமன்ற பேரவைத் தலைவர் மு.அப்பாவு, மாவட்ட ஆட்சித் தலைவர் வே.விஷ்ணு, பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் மு.அப்துல்வகாப், நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினர்கள் ரூபி.ஆர்.மனோகரன், மாநகராட்சி மேயர் பி.எம்.சரவணன் ஆகியோர் முன்னிலையில் இன்று (17.03.2022) குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்து புத்தக திருவிழாவில் அமைக்கப்பட்டுள்ள அரங்குகளை பார்வையிட்டு உலக சாதனைக்காக தொடர்ந்து 11 நாட்களும் தொடர் புத்தக வாசிப்பு நிகழ்ச்சியில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதிய உங்களில் ஒருவன் என்ற நூலை தொடர் வாசிப்பு குழுவினரிடம் வழங்கி தொடர் புத்தக வாசிப்பை தொடங்கி வைத்தார்.

Tags

Next Story