நெல்லையில் 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு: ஆட்சியர் துவக்கி வைப்பு

நெல்லையில் 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு: ஆட்சியர் துவக்கி வைப்பு
X

தைப்பொங்கல் திருவிழாவை முன்னிட்டு 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பினை நெல்லையில் மாவட்ட ஆட்சியர் விஷ்ணு தொடங்கி வைத்தார்.

தைப்பொங்கலை முன்னிட்டு 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பினை நெல்லையில் மாவட்ட ஆட்சியர் விஷ்ணு தொடங்கி வைத்தார்.

தமிழர் திருநாளான தைப்பொங்கல் திருவிழாவை சிறப்பாக கொண்டாடும் வகையில் 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பினை நெல்லையில் மாவட்ட ஆட்சியர் விஷ்ணு தொடங்கி வைத்தார்.

தமிழர் திருநாளான தைப்பொங்கலை சிறப்பாக கொண்டாடும் வகையில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் பச்சரிசி, வெல்லம், பாசிப்பருப்பு, நெய் உள்ளிட்ட 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுகிறது.

இதனை சென்னையில் முதல்வர் மு.க ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதன் தொடர்ச்சியாக நெல்லை பாளையங்கோட்டை தியாகராஜ நகரில் உள்ள நியாய விலை கடையில் நடந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் விஷ்ணு, முன்னாள் சட்டப்பேரவை தலைவர் ஆவுடையப்பன், பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அப்துல் வகாப் ஆகியோர் பொங்கல் பரிசுத் தொகுப்பினை பொதுமக்களுக்கு வழங்கி தொடங்கி வைத்தனர்.

நெல்லை மாவட்டத்தில் நடைமுறையில் உள்ள அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிக்கும் குடும்பங்கள் என மொத்தம் 4 லட்சத்து 78 ஆயிரத்து 496 குடும்ப அட்டைதாரர்களுக்கு 24.16 கோடி ரூபாய் மதிப்பில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுகிறது. கொரோனா விதிமுறைகளை பின்பற்றி சுழற்சி முறையில் ஒரு கடைக்கு 100 முதல் 200 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நியாயவிலை கடைகளுக்கு வரும் அனைத்து அட்டைதாரர்கள் தவறாமல் முக கவசம் அணிந்து வரவேண்டும் மற்றும் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டுமென மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நிகழ்ச்சியில் நெல்லை மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குனர் சுபாஷினி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஏ.எல்.எஸ்.லட்சுமணன், உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!