பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கி பசுமையை பேணி காத்த காவல் ஆய்வாளர்

பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கி பசுமையை பேணி காத்த காவல் ஆய்வாளர்

பொதுமக்களுக்கு மரக்கன்று வழங்கிய காவல் ஆய்வாளர் சாம்சன்

உள்ளாட்சி தேர்தல் வேட்பு மனுத்தாக்கல் பாதுகாப்பு பணிக்க வந்த காவல் ஆய்வாளர் பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கினார்

உள்ளாட்சி தேர்தல் வேட்புமனுத்தாக்கல் பாதுகாப்பு பணிக்க வந்த இடத்தில் பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கி பசுமையை பேணி காத்த காவல் ஆய்வாளரின் செயல் பாராட்டை பெற்றது.

தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் தொடங்கி நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நெல்லை மாநகராட்சியில் நான்கு மண்டலங்களில் மொத்தம் 55 வாடுகளுக்கு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறுவதையொட்டி மண்டல அலுவலகங்களில் வேட்புமனுக்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதையொட்டி நான்கு மண்டல அலுவலகங்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

அதன் ஒரு பகுதியாக பாளையங்கோட்டை மண்டல அலுவலகத்தில் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் சாம்சன் தலைமையில் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போதும் அலுவலகத்தில் ஒதுக்குப்புறமாக நூற்றுக்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் வீணாக கிடப்பதைக் கண்டு ஆய்வாளர் சாம்சன் வேதனையடைந்தார்.

உடனடியாக மாநகராட்சி உயர் அதிகாரியின் அனுமதி பெற்று அந்த மரக்கன்றுகளை மண்டல அலுவலகத்திற்கு வரும் பொதுமக்களுக்கு வழங்க ஆய்வாளர் முடிவெடுத்தார். அதன்படி அங்கு வந்த பொதுமக்கள் மற்றும் குழந்தைகளிடம் மரக்கன்றுகளை வழங்கி அதை தங்கள் வீடுகளில் வளர்த்து பசுமையை ஏற்படுத்தும்படி கேட்டுக் கொண்டார். பொதுவாக போலீசார் பாதுகாப்புக்கு செல்லும் இடங்களில் தங்கள் பணியைத் தவிர பிற விஷயங்களில் கவனம் செலுத்த தயங்குவார்கள்.

இதுபோன்ற சூழ்நிலையில், ஆய்வாளர் சாம்சன் பசுமையை பேணிக்காப்பதும் தனது கடமை என்பதை உணர்ந்து மண்டல அலுவலகத்தில் வீணாக கிடந்த மரக்கன்றுகளை பொது மக்களுக்கு வழங்கிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

Tags

Read MoreRead Less
Next Story