பாளையங்கோட்டை யோக விநாயகர், சாய்பாபா கோயிலில் நவராத்திரி விழா
கே.டி.சி. நகர் வடபகுதியில் உள்ள ஸ்ரீ நவக்கிரக யோக விநாயகர் மற்றும் யோக சாய்பாபா கோயிலில் நவராத்திரி நிறைவு விழா நடைபெற்றது.
நெல்லையை அடுத்த பாளையங்கோட்டை கே.டி.சி. நகர் வடபகுதியில் அருள்பாலித்துக் கொண்டிருக்கும் ஸ்ரீ நவக்கிரக யோக விநாயகர் மற்றும் யோக சாய்பாபா கோயிலில் நவராத்திரி நிறைவு விழா, சொற்சுவை இலக்கிய வட்டம் தொடக்க விழா மற்றும் அபிராமி அந்தாதி பாடல்கள் 10 நாட்கள் பாடிய மகளிருக்கு பாராட்டு விழா ஆகிய முப்பெரும் விழா நடைபெற்றது.
இவ்விழாவிற்கு திருக்குறள் இரா.முருகன் தலைமை தாங்கினார். தமிழறிஞர் வை.இராமசாமி, ஓய்வுபெற்ற பி.டி.ஓ.முத்துசாமி, ரயில்வே வேலாயுதம், வழக்கறிஞர்கள் நாகராஜன், சேர்மராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருக்குறள் பிரபா இறைவணக்கம் பாடினார். கோயில் நிர்வாகி புலவர் மா.கந்தக்குமார் வரவேற்றார். தமிழறிஞர்கள் பாப்பையா, பாண்டியன், ஆசிரியர் சரவணக்குமார், கோமதிநாயகம், பாளையங்கோட்டை மைய நூலக வாசகர் வட்டதுணைத் தலைவர் கோ. கணபதி சுப்பிரமணியன் ஆழ்வார் திருநகரி ஐயங்கார் ஆகியோர் வாழ்த்துரை பேசினார்கள். புத்தனேரி கோ. செல்லப்பா சொற்சுவை இலக்கிய வட்டத்தை தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றினார்.
புதிதாக வெற்றி பெற்ற கீழநத்தம் பஞ்சாயத்து தலைவர் வே.அனுராதா பத்துநாட்கள் கோயிலில் அபிராமி அந்தாதி பாடிய சரஸ்வதி, அபிராமி, ஜெயலெட்சுமி, கோமதி, லெட்சுமிதேவி, வேலாயுதம், சேர்மராஜ், செல்லப்பா, வெங்கடேஷ் ஆகியோருக்கு பொன்னாடை அணிவித்து பரிசுகளை வழங்கி வாழ்த்து தெரிவித்தார். விழா ஏற்பாடுகளை கோயில் டிரஸ்ட் கந்தகுமார், பழனி மல்லிகா, சிவா ,சுப்பையா ஆகியோர் செய்து இருந்தனர்.
மேலும் விழாவில் இலக்கிய கூட்டம் ஒவ்வொரு ஆங்கில மாதம் முதல் ஞாயிறு காலை பத்து மணிக்கு நடைபெறும் எனவும், இலக்கியம், ஆன்மிகம், கவிதை ஆகியன குறித்து அன்பர்கள் கலந்துரையாடல் மற்றும் சிறப்பு பேச்சாளர் சொற்பொழிவு ஆகியன நடைபெறும் எனவும் தீர்மானிக்கப்பட்டது. கோயில் அர்ச்சகர் வெங்கடேஷ் நன்றி கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu