பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரி தேசிய மாணவர் படையினர் சமூக நலப்பணி
கல்லூரியில் இருந்து பாளையங்கோட்டை பஸ் நிலையம் வரை உள்ள சாலையின் இருபுறங்களில் உள்ள குப்பைகளை அகற்றினர்.
நெல்லை பாளையங்கோட்டையில் தூய்மை இந்தியா ஈடுபாட்டை உறுதிசெய்யும் நோக்கமாக தூய சவேரியார் கல்லூரி தேசிய மாணவர் படையினர் சமூக நல பணியில் ஈடுபட்டனர்.
தூய்மை இந்தியா திட்டத்தின் வாயிலாக தமிழ்நாடு ஐந்தாம் பட்டாலியன் கமாண்டிங் ஆபீசர் லெப்டினண்ட் கர்னல் நிதிஷ்குமார் உத்தரவின்படி, சுபேதார் மேஜர் இராஜேஷ் வழிகாட்டுதலில் ஒரு நாள் சமூக நலப் பணி முகாம் நடைபெற்றது.
இம்முகாமில் தூய சவேரியர் கல்லூரியை சார்ந்த தேசிய மாணவர் படை (NCC) மாணவர்களால் மேற்கொள்ளப்பட்டது. முனைவர் லெப்டினன்ட் S.கந்தன் ஒருங்கினணப்புடன் 60 NCC மாணவர்கள் பாளையங்கோட்டை பேருந்து நிலையம் அருகில் தூய்மைப் பணியை. தொடங்கினர். தொடர்ந்து கல்லூரியில் இருந்து பாளையங்கோட்டை பஸ் நிலையம் வரை உள்ள சாலையின் இருபுறங்களில் உள்ள குப்பைகளை அகற்றினர்.
இம்முகாமில் வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவுச் சிலை மற்றும் அதை சுற்றி அடர்ந்துள்ள குப்பைகள், பிளாஸ்டிக் கழிவுப் பொருட்களை அகற்றினார்கள். மேலும் புல் புதர்களை வெட்டி முறையாகச் சுத்தம் செய்தனர். சுமார் இரண்டு டன் எடையளவுள்ள பலவகையானக் குப்பைகளை முறையாக அப்புறப்படுத்தினர். இந்த பிரச்சாரம் ஆசாதி அமித் மஹோத்ஸாவைக் கொண்டாட மேற்கொள்ளப்பட்டது.
இந்த திட்டம் விழிப்புணர்வு ஏற்படுத்துதல், மக்களை அணிதிரட்டுதல் மற்றும் தூய்மை இந்தியாவில் ஈடுபாட்டை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இம்முகாம் சிறப்பாக நடைபெற கம்பெனி ஹவில்தார் மேஜர் ஜி.ராமர் ஒத்துழைப்பு நல்கினர். இம் முகாம் இன்று காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரை சிறப்பாக நடைபெற்று நிறைவடைந்தது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu