பாளையங்கோட்டையில் தசரா திருவிழா: 12 அம்மன் சப்பரங்கள் அணிவகுப்பு
பாளையங்கோட்டையில் அமைந்துள்ள 12 திருக்கோவில்கள் அம்மன் சிம்ம வாகனத்தில் அணிவகுப்பு.
நெல்லை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற தசரா விழாவில் பாளையங்கோட்டையில் அமைந்துள்ள 12 திருக்கோவில்கள் அம்மன் சிம்ம வாகனத்தில் அணிவகுப்பு.
தென் மாநிலங்களின் பிரபல விழாக்களில் ஒன்றான நவராத்திரி தசரா விழா கா்நாடக மாநிலம் மைசூர், தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்திற்கு அடுத்தபடியாக நெல்லை மாவட்டத்தில் பாளையங்கோட்டையில் தசரா விழா 10 நாட்கள் கோலாகலமாக கொண்டாடப்படும். இந்த ஆண்டு தசரா விழா கடந்த 6ம் தேதி ஆயிரத்தம்மன் கோயிலில் கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து நெல்லையில் உள்ள அம்மன் கோயில்களில் தசரா பண்டிகை தொடங்கியது.
பாளையங்கோட்டையில் உள்ள ஆயிரத்தம்மன், பேராத்து செல்வி அம்மன், முத்தாரம்மன், தூத்துவாரி அம்மன், உச்சினிமாகாளி அம்மன், உலகம்மன், முப்பிடாதி அம்மன் உட்பட 12 கோயில்களில் அம்மன் கொலு வீற்றிருக்கும் வைபவம் நடைபெற்று வந்தது. கடந்த 9 நாட்களும் அம்மன் ஒவ்வொரு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். 10ம் திருநாளான விஜயதசமியையொட்டி அம்மன் கோயில்களிலிருந்து மின்னொளியில் 12 சப்பரங்கள் இரவு வீதிஉலா நடைபெற்றது. அரசு விதித்துள்ள விதிமுறைகளை கடைபிடித்து சப்பரங்கள் வீதி உலா வந்து எருமைகிடா மைதானத்தை வந்தடைந்தது.
12 சப்பரங்களும் ஒன்றாக அணிவகுத்து நிற்க சூரசம்ஹார நிகழ்வு நடைபெற்றது. சூரன் 12 அம்பாளையும் சுற்றி வந்தததும் அனைத்து அம்மனுக்கும் தலைவியான ஆயிரத்தம்மன் யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட சுலாயுதத்தால் தலையை வெட்டினா். தொடா்நது மகிஷ முகம் (ஏருமை தலை) கொண்டு ஆக்ரோஷத்துடன் போா் புாியவர அம்பாள் கோபத்துடன் மகிஷனை சம்ஹாரம் செய்தாா். பின்னா் அனைத்து அம்பாளுக்கும் கற்பூரம் காண்பிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து நாளை தாமிரபரணி ஆற்றில் தீர்த்தவாாி நடைபெறும்.
கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் காரணமாக தசரா திருவிழாவில் பக்தர்களுக்கு கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. இருந்த போதும் விரதமிருந்த பக்தா்கள் இந்நிகழ்ச்சியினை நேரடியாக கண்டு மகிழ்ந்தனா். மாநகர காவல் துறையினா் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனா்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu