பாளை. ராஜகோபாலசுவாமி கோவிலில் நந்த சப்தமியை முன்னிட்டு 108 கோ பூஜை
பாளையங்கோட்டை ஸ்ரீ அழகிய மன்னார் வேதநாராயணர் ராஜகோபாலசுவாமி திருக்கோவிலில் நந்த சப்தமியை முன்னிட்டு 108 கோ பூஜை நடைபெற்றது.
பாளையங்கோட்டை ஸ்ரீ அழகிய மன்னார் வேதநாராயணர் ராஜகோபாலசுவாமி திருக்கோவிலில் நந்த சப்தமியை முன்னிட்டு 108 கோ பூஜை. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் அமைந்துள்ள பழமையான வைணவ திருத்தலங்களில் ஒன்று அழகிய மன்னார் இராஜகோபாலசுவாமி திருக்கோவில். இங்கு மூலவா் வேதவல்லி, குமுதவல்லி சமேத வேதநாராயணா், மூல விமானத்தில் ஸ்ரீ தேவி பூதேவி சமேத அழகிய மன்னாா் மற்றும் உற்சவா் ருக்மணி சத்யபாமா சமேத இராஜகோபாலர் என மூன்று திருக்கோலங்களில் பக்தா்களுக்கு அருள்பாலித்து வருகின்றாா். இத் திருக்கோவிலில் ஆண்டுதோறும் பல்வேறு உற்ச்சவங்கள் நடைபெற்று வருகின்றன. கும்பாபிஷேகம் நடைபெற்று 10 ஆண்டுகள் கழிந்ததால் விரைவில் கும்பாபிஷேகம் நடைபெற வேண்டியும், உலக மக்கள் கொரோனா என்னும் கொடியநோயிலிருந்து பாதிப்படைவது நீக்கவும் பக்தா்கள் பெரு முயற்சியால் 108 கோ பூஜை ஏற்பாடு செய்யப்பட்டது.
வெள்ளிக்கிழமையும், நந்த சப்தமியும் கூடிய சுபநாளான இன்று 108 கோ பூஜை நடத்தப்பட்டது. இதற்காக காலை நடை திறக்கப்பட்டு விஸ்வரூப தாிசனமும், சுவாமிக்கு திருமஞ்சனமும் நடைபெற்றது. தொடா்நது பிரபந்த கோஷ்டியினாின் மனவாளமாமுனிகளின் உபதேச ரத்தினமாலை பெருமாள் முன் பாடப்பட்டது. கோ பூஜைக்காக பசுமாடுகள் மற்றும் கன்றுகள் கொண்டு வரப்பட்டது. ஆழ்வார் திருநகரி 41வது பட்டம் ஸ்ரீமத் பரமஹம்ஸ யயாதி எம்பெருமானார் ஜீயர் சுவாமிகள் எழுந்தருளியிருந்து மங்களாசாசனம் செய்தார். அவருக்கு பூருண கும்ப மாியாதை அளிக்கப்பட்டு மாியாதைகள் செய்யப்பட்டது. தொடா்நத ஜீயா் சுவாமிகள் கோபூஜை நடத்தும் தம்பதியினரையும். அவா்கள் குடும்பத்தினரையும், 108 பசுக்களையும் ஆசிர்வாதம் செய்தாா். பின்னர் கருட மண்டபத்தில் பசுவுக்கும், கன்றுக்கும் பூஜைகள் நடைபெற்றது.
ஜீயா் சுவாமிகள் ஆசிா்வாதத்துடன் கோபூஜை சங்கல்பம் செய்யப்பட்டது. தொடா்ந்து பசு கன்றுக்கு புது வஸ்திரம் மாலை அணிவிக்கப்பட்டு ஸ்ரீசுக்தம் லட்சுமி அஷ்டோத்திரம் சொல்லி குங்குமத்தாலும், பூக்களாலும் அர்ச்சனை நடத்தப்பட்டது. அங்கிருந்த தம்பதியினரும் சேர்ந்து கோபூஜை செய்தனர். நிறைவாக பசுக்களுக்கு கற்பூர ஆரத்தி காண்பிக்கப்பட்டது. வந்திருந்த பக்தர்களுக்கு ஜீயர் சுவாமிகளிடம் ஆசீர்வாதம் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு கோபூஜையையும், சுவாமியையும் தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை நெல்லை சகஸ்ரநாம மண்டலி இந்து ஆலய பாதுகாப்பு இயக்கம், நெல்லை உழவாரப்பணி ஸ்ரீ கோபாலன் கைங்கர்ய சபா ஸ்ரீ ராஜகோபாலன் பஜனை குழு மற்றும் திருக்கோவில் திருப்பணி கமிட்டியினர் செய்திருந்தனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu