பாளை. மேடை காவல்நிலையம் ரூ.3.6 காேடி மதிப்பில் புதுப்பிக்கும் பணி துவக்கம்

பாளை. மேடை காவல்நிலையம் ரூ.3.6 காேடி மதிப்பில் புதுப்பிக்கும் பணி துவக்கம்
X

பாளையங்கோட்டை மேடை காவல் நிலையம் 3.6 கோடி ரூபாய் மதிப்பில் பழமை மாறாமல் புதுப்பிக்கும் பணியினை சபாநாயகர் அப்பாவு, அமைச்சர் தங்கம் தென்னரசு தொடங்கி வைத்தனர்.

பாளையங்கோட்டை மேடை காவல் நிலையம் ரூ.3.6 கோடி மதிப்பில் புதுப்பிக்கும் பணியினை சபாநாயகர், அமைச்சர் ஆகியோர் துவக்கி வைத்தனர்.

நெல்லை சீர்மிகு நகர திட்டத்தின் கீழ் பாளையங்கோட்டை மேடை காவல் நிலையம் செயல்பட்டு வந்த மேற்கு கொத்தளத்தை 3.6 கோடி ரூபாய் மதிப்பில் பழமை மாறாமல் புதுப்பிக்கும் பணியினை சபாநாயகர் அப்பாவு, தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் தொடங்கி வைத்தனர். இந்த பணிகள் 6 மாதகாலத்தில் முடிக்கப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

நெல்லை, பாளையங்கோட்டையில் பாண்டியர் கால கோட்டை அமைந்துள்ளது. இதில் ஆங்கிலேயர் காலத்தில் இருந்து காவல் நிலையம் செயல்பட்டு வந்தது. மேற்கு கொத்தளம் என அழைக்கப்படும் இந்த கோட்டையின் பாரம்பரியத்தை பாதுகாக்கும் வகையில் மாநகராட்சி சீர்மிகு திட்டத்தின கீழ் 3.6 கோடி ரூபாய் மதிப்பில் இதனை பழமை மாறாமல் புதுப்பிக்கும் பணியினை சாபாநாயகர் அப்பாவு, தொழில்துறை அமைச்சர் தங்கம்தென்னரசு ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

இங்கு மேடை காவல் நிலையத்தில் இருக்கை வசதிகள், கட்டிடங்களை சுற்றி இருக்கை வசதிகள், பழங்கால வரலாற்றை சித்தரிக்கும் சுதந்திர சுவர்கள் 8 இடங்களில் அமைகிறது, அலங்கார விளக்குகள் , படிக்கட்டுகளில் அபிவிருத்திப் பணிகள் செய்தல், கழிப்பிட வசதிகள் மேற்கொள்ளுதல் மற்றும் 345 சதுர மீட்டர் அளவிற்கு வரலாற்று பூங்காவிற்கு இடம் ஒதுக்கீடு செய்து பணிகளை மேற்கொள்ளுதல் போன்ற பல்வேறு புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது .

இதனைத்தொடர்ந்து அமைச்சர் தங்கம்தென்னரசு செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்:- நெல்லை அரசு மருத்துவக்கல்லூரயில் 1.25கோடி மதிப்பில் இரண்டாவது ஆக்சிஜன் உற்பத்தி நிலையம் தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நெல்லை மாவட்டத்திற்கு தேவையான உச்சபச்ச ஆக்சிஜன் கிடைக்கும். குறிப்பாக 700 கிலோ லிட்டர் உற்பத்தி செய்யப்படும், ஆக்சிஜன் உற்பத்தியில் நெல்லை மாவட்டம் தன்னிறைவுடன் உள்ளது.

முதல்வராக மு.க.ஸ்டாலின் ஆட்சி பொறுப்பேற்ற பின் பண்பாட்டு சின்னங்கள், தமிழர்களின் தொன்மையான நாகரீகம், கலாச்சாரம் ஆகிவற்றை வெளிக்கொண்டு வருவதற்கான பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி வருகிறார். தமிழக முதல்வர் அறிவித்தபடி ரூபாய் 15 கோடியில் சர்வதேச தரத்துடன் பொருநை அருங்காட்சியகம் நெல்லையில் அமைக்கப்பட உள்ளது. இதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. விரிவான திட்ட அறிக்கையும் தயார் செய்யப்பட்டு விட்டது. கூடிய விரைவில் பணிகள் தொடங்கும். பாளையங்கோட்டை மேடை காவல் நிலையம் முன்பு, போர்க்களத்தின் கோட்டை கொத்தளம் ஆக இருந்தது. இதனை பராமரித்து பாதுகாக்கும் வகையில் ரூ. 3 கோடியே 6 லட்சம் செலவில் பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டு சுற்றுலா தலமாக மாற்ற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.அதற்கான பணிகள் இன்று துவங்கப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் இன்னும் 6 மாத காலத்திற்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

வள்ளியூர் அருகே உள்ள துலுக்கர்பட்டியில் தொல்லியல் மேட்டு பகுதியில் அகழ்வாய்வு செய்ய மத்திய அரசின் ஒப்புதலுக்கு அனுப்ப பட்டு உள்ளது. ஒப்புதல் கிடைக்கப்பெற்ற உடன் பணிகள் துவங்கும். தொல்லியல் சின்னங்களை ஒட்டி உள்ள பகுதிகளில் கனிம வளம் தோண்டி எடுக்க அனுமதி இல்லை. தாமிரபரணி ஆற்றின் கல் மண்டபங்கள், படித்துறைகள், வரலாற்றுச் சின்னங்களைப் பாதுகாப்பதில் உறுதியாக நடவடிக்கை எடுக்கப்படும். அதுபோன்று தமிழகத்தில் கலை பொக்கிஷம் நிறைந்த நெல்லையப்பர் கோவிலும் பராமரிக்கப்படும் என தெரிவித்தார்.

முன்னதாக நெல்லை அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் ஒரு கோடியே 25 லட்ச ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தை தமிழக சட்டப் பேரவைத் தலைவர் அப்பாவு மற்றும் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் திறந்து வைத்தனர். இதனைத் தொடர்ந்து மருத்துவமனை வளாகத்தில் 25 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள தலைக்காய உயர் சார்பு சிகிச்சைப் பிரிவு மற்றும் 36 லட்ச ரூபாய் மதிப்பில் நுண்கிருமிகள் நீக்கும் கருவியின் செயல்பாட்டையும் தொடங்கி வைத்தனர்.

இந்த நிகழ்ச்சியில் பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அப்துல்வகாப், நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினர் ரூபிமனோகரன், மாவட்ட ஆட்சியர் விஷ்ணு, முன்னாள் சட்டப்பேரவைத் தலைவர் ஆவுடையப்பன், மூத்த உறுப்பினர் கணேஷ்குமார் ஆதித்தன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!