நெல்லை-பொருநை புத்தகத்திருவிழா: மாணவ மாணவிகள் விழிப்புணர்வு ஓவியம்
பொருநை புத்தக கண்காட்சியை முன்னிட்டு நெல்லையில் ஓவிய மாணவ- மாணவிகள் விழிப்புணர்வு ஓவியங்கள் வரைந்தனர்
பொருநை புத்தக கண்காட்சியை முன்னிட்டு நெல்லையில் ஓவிய மாணவ- மாணவிகள் விழிப்புணர்வு ஓவியங்கள் வரைந்தனர்.
பொருநைநெல்லை புத்தகத் திருவிழா நெல்லை 2022/ வரும் மார்ச் 18.03.2022 ல் ஆரம்பமாகி 10 நாட்கள் பாளையங்கோட்டை வ உசி திடலில் நடைபெறவுள்ளது. அதனை முன்னிட்டு மாவட்ட மைய நூலகம் மற்றும் வாசகர் வட்டம், தேசிய வாசிப்பு இயக்கம் இணைந்து புத்தகக் கண்காட்சி விளம்பர சுவர் ஓவியம் வரைதல் நிகழ்ச்சி நடத்தியது.
சிவராம் கலைக்கூடம் ஓவிய ஆசிரியர் வழிகாட்டுதலில் இளம் மாணவ-மாணவிகள் திருநெல்வேலி அடையாளங்களான அருள்மிகு நெல்லையப்பர் கோவில், பொருநை ஆற்று பாலம், புத்தக ஆர்வலர்கள் பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் மு.கருணாநிதி, மாண்புமிகு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஓவியங்களை அருமையாக வரைந்திருந்தனர். புத்தகத்திருவிழா விழிப்புணர்வு பணிகளை நூலக ஆணைக்குழு மேற்கொள்ள மாவட்ட நிர்வாகம் பணிக்கப்பட்டதை முன்னிட்டு நிகழ்வு மாவட்ட மைய நூலக பணியாளர்கள், தேசிய வாசிப்பு இயக்கத்தினர், வாசகர் வட்ட பொறுப்பாளர்கள் இணைந்து ஏற்பாடு செய்திருந்தனர்.
இதில், எழுத்தாளர் நாறும்பூநாதன், வட்டாட்சியர் செல்வம், மாவட்ட நூலக அலுவலர் மீனாட்சி சுந்தரம், முதன்மை நூலகர் வயலட், அருங்காட்சியக காப்பாளர் சிவ.சத்தியவள்ளி, வாசகர் வட்டம் முத்துசாமி, ரோட்டரியன் பாலசுப்பிரமணியன்,தேசிய வாசிப்பு இயக்கத் தலைவர் தம்பான், ஓவிய ஆசிரியர்கள் கோவிந்தராஜன், திருவானந்தம், நூலக கண்காணிப்பாளர் சங்கரன், நல்நூலகர் முத்துக்கிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu