தொழிலாளர் விரோத போக்கை கண்டித்து அனைத்து தொழிற்சங்கங்கள் திறந்தவெளி கருத்தரங்கம்
நெல்லை வண்ணாரப்பேட்டை அரசு போக்குவரத்து பொது மேலாளர் அலுவலகம் முன்பு அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் திறந்தவெளி கருத்தரங்கம் நடைபெற்றது.
மத்திய அரசின் தொழிலாளர் விரோதப் போக்கை கண்டித்து நெல்லை வண்ணாரப்பேட்டை அரசு போக்குவரத்து பொது மேலாளர் அலுவலகம் முன்பு அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் திறந்தவெளி கருத்தரங்கம் நடைபெற்றது.
இந்த கருத்தரங்கிற்கு தொமுச அமைப்பு செயலாளர் தர்மன் தலைமை வகித்தார். தொமுச சார்பில் முருகன்,மைக்கேல் நெல்சன், மகாவிஷ்ணு, மாஞ்சோலை மைக்கேல், சிஐடியு சார்பில் தோழர் மோகன், பெருமாள், ஜோதி, ஏஐடியுசி சார்பில் தோழர் சங்கரன், சுப்பிரமணியன், ஜெபக்குமார், ஐஎன்டியூசி சார்பில் முருகராஜ், வேலுசாமி, கந்தையா, HMS சார்பில் சுப்பிரமணியன், பாலசுப்ரமணியன், நல்லசிவம், TTSF சார்பில் சந்தானம், பேச்சிமுத்து, பரமசிவம், AICCTU சார்பில் சங்கரபாண்டியன், கணேசன், கருப்பசாமி ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள்.
கருத்தரங்கு கூட்டத்தில் வேளாண் சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் உயிர்நீத்த விவசாயிகள் குடும்பத்திற்குமத்திய அரசு பதில் சொல்ல வேண்டும், போராட்டத்தின் போது விவசாயிகள் மீது போடப்பட்ட வழக்குகளை வாபஸ் வாங்குவது, தொழிலாளர் நல சட்டங்களை நான்கு தொகுப்புகளாக மாற்றியதை ரத்து செய்ய வேண்டும், சாலை பாதுகாப்பு சட்டத்தை ரத்து செய்ய வேண்டும், ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தை நகரங்களுக்கும் விரிவுபடுத்த வேண்டும், வருமான வரி செலுத்தும் அளவிற்கு வசதி இல்லாத குடும்பங்களுக்கு மாதம் ஒன்றுக்கு ரூபாய் 7500 விதம் நிவாரணம் வழங்க வேண்டும்.
ஒப்பந்தம், சுய உதவிக்குழு மற்றும் தின கூலி தொழிலாளர்களை நிரந்தரப்படுத்த வேண்டும். பொதுத் துறைகளை விற்று பணம் ஆக்காமல் திட்டத்தை கைவிட வேண்டும், பெட்ரோல், டீசல், சிலிண்டர் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். மின்சார சட்டம் 2020 கைவிடவேண்டும், முறைசாரா தொழிலாளர் நல வாரியத்தை சீர்குலைக்க கூடாது, கொரோனா பெருந்தொற்றில் பணிபுரிந்த முன் களப் பணியாளர்களுக்கு பாதுகாப்பு காப்பீடு வசதி செய்து கொடுக்க வேண்டும், அங்கன்வாடி, ஆஷா, சத்துணவு திட்ட பணியாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியத்தை உறுதிப்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் மத்திய அரசின் தொழிலாளர் விரோத போக்கை கண்டித்தும் உரையாற்றினார்கள். திறந்தவெளி கருத்தரங்கின் இறுதியில் முருகேசன் நன்றி உரையாற்றினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu