சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் புதிய நூலக கட்டிடம்: அமைச்சர் பொன்முடி திறப்பு
பாளையங்கோட்டை சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் புதிய திறப்பு விழாவில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கலந்து கொண்டு திறந்து வைத்தார்.
செல்போன் உள்ளிட்ட டிஜிட்டல் யுகம் வளர்ச்சி பெற்றாலும் நூல்களைப் படித்தால் தான் நிலைத்து நிற்க முடியும் என்றும் தென்பகுதியில் ஆராய்ச்சி மாணவர்கள் பயன்பெறும் வகையில் மதுரையில் மிகப்பெரிய அளவில் கலைஞர் நூலகத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நிர்மாணித்து வருகிறார் என பாளையங்கோட்டையில் உள்ள சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் நூலக கட்டிடத்தை திறந்து வைத்த உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
நெல்லை பாளையங்கோட்டையில் அமைந்துள்ள சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் கல்லூரி நிரி்வாகம் சார்பில் மூன்றரை கோடி ரூபாய் மதிப்பில் மிகப் பெரிய நூலகம் கட்டப்பட்டு லட்சக்கணக்கான புத்தகங்கள் வைக்கப்பட்டுள்ளது. இந்த நூலகத் திறப்பு விழாவில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கலந்து கொண்டு நூலகத்தை திறந்து வைத்தார்.
பின்னர் நடைபெற்ற விழாவில் அவர் உரையாற்றிப் பேசுகையில்:- உயர்கல்வி கற்பதற்கு மிகவும் உறுதுணையாக இருப்பது நூலகம்தான். இதனால் தான் அன்று சென்னையில் ஆசியாவிலேயே மிகப்பெரிய நூலகத்தை கலைஞர் கட்டினார். அதே போன்று தற்போது தென் தமிழகத்தில் ஆராய்ச்சி மாணவர்கள் பயன்பெறும் வகையில் சென்னையில் கட்டப்பட்டுள்ள நூலகத்தை விட மிகப்பெரிய அளவில் கலைஞர் நூலகத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நிர்மாணித்து வருகிறார். கல்லூரிகள் உயர்கல்வித்துறையில் இளைஞர்களை வளர்த்தெடுக்கும் அதற்கு பெரும் துணையாக நிற்பது நூலகம்தான், நூலகத்திற்கு முதலில் ஆசிரியர்கள் செல்லவேண்டும். அதனைப்பார்த்து மாணவர்கள் நூலகத்தை தேடிவருவார்கள். செல்போன் உள்ளிட்ட டிஜிட்டல் யுகம் வளர்ச்சி பெற்றாலும் நூல்களைப் படித்தால் தான் நிலைத்து நிற்க முடியும் என்று தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமப்பேரவைத் தலைவர் ஆவுடையப்பன், பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அப்துல்வகாப் , மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக துணைவேந்தர் பிச்சுமணி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் டி.பி.எம்.மைதீன்கான், ஏ.எல்.எஸ்.லட்சுமணன், மத்திய மாவட்ட அவைத்தலைவர் சுப.சீத்தாராமன், கல்லூரித் தாளாளர் செய்து அப்தூர்ரஹ்மான் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu