/* */

நெல்லை: சாலையில் நோயால் அவதிப்பட்ட முதியவரை தன்னார்வலர்கள் மீட்டு சிகிச்சையளித்தனர்

மாவட்ட ஆட்சியர் அலுவலக சாலையில் நோயால் அவதிப்பட்ட முதியவரை மீட்டு சுத்தம் செய்து, உணவளித்து, சிகிச்சை அளித்து வரும் தன்னார்வலர்கள்.

HIGHLIGHTS

நெல்லை: சாலையில் நோயால் அவதிப்பட்ட முதியவரை தன்னார்வலர்கள் மீட்டு சிகிச்சையளித்தனர்
X

மாவட்ட ஆட்சியர் அலுவலகம் செல்லும் சாலையில் நோயால் (விதர் வீக்கம்) அவதிப்பட்ட முதியவரை மீட்டு ஆதரவற்றோர் தற்காலிக முகாமில் சேர்க்கப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

நெல்லை கொக்கிரகுளம் ஆட்சியர் அலுவலக சாலையிலேயே நீண்ட காலமாக வெங்கடாசலம் (64) என்பவர் இரவு, பகலாக இருந்து வருகிறார். சமீபத்தில் இவருக்கு உடல்நிலை சரி இல்லாமல் போனது. இதனை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு செல்லும் அரசு அலுவலர்கள், பத்திரிக்கையாளர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் கண்டு மாநகராட்சி ஆணையரிடம் உதவி செய்யும்படி கேட்டுக்கொண்டனர்.

அதன் அடிப்படையில் மாநகராட்சி ஆணையர் முதியவரை மாநகராட்சி தற்காலிக முகாமில் சேர்த்து சிகிச்சை அளிக்க அறிவுறுத்தினார். இதனை தொடர்ந்து R-SOYA தன்னார்வலர்கள் மாரிமுத்து, கணேஷ் தலைமையில் ஐயப்பன், தினேஷ், ECRC கவுன்சிலர் கபீரியேல், முத்து உதவியுடன் சம்பவ இடத்திற்கு சென்றனர். அங்கு முதியவர் மலம், ஐலம் கழித்து மிகவும் மோசமான நிலையில் எழுவதற்கு கூட முடியாமல் இருந்தார். அவரை ஆம்புலன்ஸ் உதவியால் மட்டுமே முதியவரை மீட்க முடியும் என்பதால் பாட்டபத்து கௌஸ் முலமாக SDPI ஆம்புலன்ஸ் பேட்டையில் இருந்து வந்து முதியவரை தூக்கி கொண்டு பாளையங்கோட்டை உழவர்சந்தை அருகில் மாநகராட்சி திருமண மண்டபத்தில் உள்ள திருநெல்வேலி மாநகராட்சி ஆதரவற்றோர் தற்காலிக சிறப்பு முகாமிற்கு அழைத்து சென்று சுத்தமாக குளிக்க வைத்து உடை மாற்றி பின் உணவு அளித்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Updated On: 5 Aug 2021 4:08 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    புத்தாண்டு நல்வாழ்த்துகள்: வாழ்க்கையை வண்ணமயமாக்கும் பொன்மொழிகள்
  2. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் இரண்டு மணி நேரம் கொட்டிய கனமழை
  3. வீடியோ
    நாடாளுமன்றத்துக்கு வந்தது புதிய படை!அப்படி என்ன சிறப்பு ! || #crpf...
  4. லைஃப்ஸ்டைல்
    அறுபதாம் அகவை வாழ்த்துக்கள்: ஒரு புதிய அத்தியாயத்தின் ஆரம்பம்
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு வாழும் கூடு..! புதுமனை புகுவிழா வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் இனிய பாடலுக்கு இதயப்பூர்வமான வாழ்த்துகள்
  7. குமாரபாளையம்
    சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
  8. ஈரோடு
    சென்னிமலையில் வீடுகளுக்குள் புகுந்த மழை வெள்ளம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    சுருங்க சொல்லி விளங்க வைக்கிறேன்..! SMS பிறந்தநாள் வாழ்த்து..!
  10. குமாரபாளையம்
    அரசு அனுமதியின்றி செயல்பட்ட பார் மூடல்; கலெக்டர் உத்தரவு