நீட் தேர்வு விலக்கு முயற்சியில் தோல்வி ஏன்? அமைச்சர் மா.சுப்ரமணியன் பதில்
சமாதானபுரத்தில் உள்ள நகர்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில், தடுப்பூசி முகாமை அமைச்சர் மா. சுப்ரமணியன் தொடங்கி வைத்தார்.
திருநெல்வேலி மாவட்டம் சமாதானபுரத்தில் உள்ள நகர்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில், கோவிட் சிறப்பு தடுப்பூசி முகாமினை, மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
தமிழகத்தில் 3கோடியே 74 லட்சத்து 89 ஆயிரத்து 89 தடுப்புசி போடப்பட்டுள்ளது. 4 கோடி தடுப்பூசி இன்று மாலைக்குள் போடப்படும். உருமாறி வரும் வைரஸ் ஆய்வு செய்யும் மரபியல் அணு ஆய்வகங்கள் இந்தியாவில் 23 இடங்களில் உள்ளன. மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த ஆய்வகங்களில் ஆய்வு செய்வதற்கு ஒரு மாதகால அவகாசம் தேவைப்படுகிறது. எனவே இந்தியாவிலேயே முதல்முறையாக தமிழகத்தில், நாளை மறுநாள் மரபியல் அணு ஆய்வகம் தொடங்கப்பட உள்ளது. தமிழகத்தில் 4 கோடி செலவில் டி எம் எஸ் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த ஆய்வகத்தை நாளை மறுநாள் முதல்வர் துவக்கி வைக்கிறார்.
குறைந்த காலஅவகாசம் இருந்ததால், இந்த ஆண்டு நீட் தேர்வில் இருந்து தமிழகம் விலக்கு பெறுவதில் வெற்றி அடைய முடியவில்லை. மாணவர்களை காக்கும் அரசாக திமுக இருக்கும். வரும் ஆண்டுகளில் சட்ட ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் அழுத்தம் கொடுக்கப்பட்டு நீட்டில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க முயற்சிகள் முழு அளவில் மேற்கொள்ளப்படும். மாணவர்கள் தவறான முயற்சியில் ஈடுப்பட வேண்டாம்.
மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிகளை மத்திய அரசு உடனடியாக தொடங்க வேண்டும். ஆறு மாத காலத்திற்குள் குறைந்தபட்ச அத்தியவசிய கட்டுமானப் பணிகளை முடித்து மருத்துவ மாணவர்கள் சேர்க்க வேண்டும் என்பதை முதல்வர் வலியுறுத்தியுள்ளார். தமிழகத்தில் 3கோடியே 74 லட்சத்து 89 ஆயிரத்து 89 தடுப்புசி போடப்பட்டுள்ளது. 4 கோடி தடுப்பூசி இன்று மாலைக்குள் போடப்படும் என அமைச்சர் மா. சுப்ரமணியன் தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu