/* */

நெல்லை:கொரோனா 3வது அலையை பொருட்படுத்தாமல் மத்திய அரசு நீட் தேர்வு அறிவிப்பை திரும்பப்பெற எஸ்டிபிஐ. கட்சி வலியுறுத்தல்.

மாணவர்களின் பாதுகாப்புக் கருதி மத்திய அரசு நீட் தேர்வு குறித்த அறிவிப்பை திரும்பப்பெற வேண்டும்.எஸ்டிபிஐ மாநில தலைவர் முபாரக் வேண்டுகோள்.

HIGHLIGHTS

நெல்லை:கொரோனா 3வது அலையை  பொருட்படுத்தாமல் மத்திய அரசு நீட் தேர்வு அறிவிப்பை திரும்பப்பெற எஸ்டிபிஐ. கட்சி வலியுறுத்தல்.
X

கொரோனா 3வது அலை எச்சரிக்கையை பொருட்படுத்தாமல் நீட் தேர்வு தேதி அறிவிப்பு. மத்திய அரசு தேர்வு அறிவிப்பை திரும்பப்பெற எஸ்.டி.பி.ஐ. கட்சி வலியுறுத்தல்

எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:கொரோனா பெருந்தொற்று அச்சம் தொடர்வதன் காரணமாக மத்திய, மாநில அரசுகள் பள்ளிகளுக்கான பொதுத்தேர்வுகளை ரத்து செய்துள்ளன. முக்கியத்துவம் வாய்ந்த பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வுகளைக் கூட மத்திய அரசின் கீழ் இயங்கும் சி.பி.எஸ்.இ. ரத்து செய்துள்ளது.

அதேபோல் அனைத்து மாநிலங்களும் ரத்து செய்துள்ளன. மேலும் கொரோனா 3வது அலை குறித்த மருத்துவ வல்லுநர்களின் எச்சரிக்கை காரணமாக தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வருகின்றது. மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு கொரோனா முதல் அலை தொடங்கிய காலத்திலிருந்து பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன.

இந்த சூழலில், மத்திய அரசு செப்டம்பர் 12 ஆம் தேதி நீட் தேர்வு நடைபெறும் என அறிவித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. மாணவர்களின் நலனில் அக்கறை கொள்ளாமல் கொரோனாவின் மூன்றாவது அலை உச்சத்தில் இருக்கும் என்று மருத்துவ வல்லுநர்களால் எச்சரிக்கப்படும் காலத்தில் அதனை பொருட்படுத்தாமல் தேர்வுக்கு திட்டமிட்டிருப்பது மத்திய அரசின் பொறுப்பற்ற தன்மையையே காட்டுகிறது.

ஆகவே மாணவர்களின் பாதுகாப்புக் கருதி மத்திய அரசு நீட் தேர்வு குறித்த அறிவிப்பை திரும்பப்பெற வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன் என்று அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Updated On: 13 July 2021 6:36 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே வலி நிவாரணி எண்ணெய் தயாரிப்பது எப்படி?
  2. லைஃப்ஸ்டைல்
    வெறும் வயிற்றில் கற்றாழை சாறு அருந்துவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி...
  3. ஆன்மீகம்
    பழனியில் வரும் ஆகஸ்ட் மாதத்தில், உலக முருக பக்தர்கள் மாநாடு
  4. லைஃப்ஸ்டைல்
    பெண்களுக்கு 7 மணி நேர தூக்கம் போதுமா..? ஆய்வு என்ன சொல்லுது?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் சாப்பிடுவதால் உடல் பருமனை அதிகரிக்கும் 5 உணவுகள் என்னென்ன...
  6. லைஃப்ஸ்டைல்
    சுவையான வத்தக்குழம்பு செய்வது எப்படி?
  7. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் தேனின் மருத்துவ குணங்களை தெரிஞ்சுக்குங்க!
  8. தென்காசி
    10ம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ,மாணவிகளுக்கு பாராட்டு...
  9. சுற்றுலா
    அண்டார்டிகாவில் ஒழுங்குபடுத்தப்பட்ட சுற்றுலா: சுற்றுச்சூழலை காப்பாற்ற...
  10. லைஃப்ஸ்டைல்
    பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வது ஆபத்து! ஹார்வர்ட் பல்கலைகழக ஆய்வு