நெல்லை: உள்ளாட்சி தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கு 2ம் கட்ட பயிற்சி வகுப்பு
நெல்லை மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கான இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்பு நடைபெற்றது.
நெல்லை மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கான இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்பை தேர்தல் பார்வையாளர் ஜெயகாந்தன் ஐ.ஏ.எஸ், மற்றும் மாவட்ட ஆட்சியர் விஷ்ணு ஆகியோர் தொடங்கி வைத்து பார்வையிட்டனர்.
நெல்லை மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் அக்டோபர் 6 மற்றும் 9-ந்தேதி இரண்டு கட்டங்களாக 9 ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட 2069 பதவிகளுக்கு தேர்தல் நடக்கிறது. இதனையொட்டி தேர்தலில் பணியாற்றும் ஊழியர்களுக்கு கடந்த 25-ந்தேதி முதல் கட்ட பயிற்சி அளிக்கப்பட்டது. இன்று இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்பு மானூர், பாளையங்கோட்டை, களக்காடு, நாங்குநேரி, வள்ளியூர் உள்ளிட்ட 9 இடங்களில் நடக்கிறது. பாளையங்கோட்டை ஒன்றிய பகுதிக்கு நெல்லை சட்டக்கல்லூரியில் பயிற்சி வகுப்பு நடக்கிறது, இந்த பயிற்சி வகுப்பு தொடக்க நிகழ்ச்சியில் தேர்தல் பார்வையாளர் ஜெயகாந்தன் ஐ.ஏ.எஸ், மற்றும் மாவட்ட ஆட்சியர் விஷ்ணு ஆகியோர் கலந்து கொண்டு பயிற்சி வகுப்பை தொடங்கி வைத்து பார்வையிட்டனர். இந்த வகுப்பில் வாக்கு சீட்டு முறை பயன்பாடு, வாக்கு பெட்டியை கையாளும் விதம் ஆகியவை குறித்து செயல்முறை விளக்கத்துடன் பயிற்சி அளிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் விஷ்ணு செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்:-
நெல்லை மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் 9 ஊராட்சி ஒன்றியங்களுக்கு இரண்டு கட்டமாக நடக்கிறது. மாவட்டத்தைப் பொறுத்தவரை 1888 வாக்குசாவடிகள் உள்ளன. தேர்தல் பணியில் 9567 ஊழியர்கள் ஈடுபடுகின்றனர். இதில் 12 மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு 59 பேரும் 122 ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு 626 பேரும், 204 ஊராட்சி தலைவர் பதவிக்கு 924 பேரும், 1731 ஊராட்சி வார்டு கவுன்சிலர் பதவிக்கு 3915 என மொத்தம் 2069 பதவிகளுக்கு 5524 வேட்பாளர்கள் போட்டி போடுகின்றனர். மாவட்டத்தில் 333 வாக்குச்சாவடிகள் பதட்டமான வாக்குசாவடிகளாக கண்டறியப்பட்டுள்ளது. இந்த வாக்குசாவடிகளுக்கு ஒரு நுண் பார்வையாளர் நியமிக்கப்பட்டு சிசிடிவி கேமிரா மூலம் கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தேர்தலை நேர்மையாகவும், நியாயமாகவும் நடத்த மாவட்ட நிர்வாகம் அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளது என தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu