நெல்லை என்.ஜி.ஓ. 'ஏ' காலனியில் புதிய உழவர் சந்தை அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி
என்.ஜி.ஓ. ஏ காலனி பகுதியில் புதிய உழவர் சந்தை கட்டும் பணியினை ஆ ட்சித் தலைவர் வே.விஷ்ணு, எம்எல்ஏ மு.அப்துல் வகாப் முன்னிலையில் அடிக்கல் நாட்டினார்.
என்.ஜி.ஓ. ஏ காலனி பகுதியில் புதிய உழவர் சந்தை கட்டும் பணியினை மாவட்டஆ ட்சித் தலைவர் வே.விஷ்ணு பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் மு.அப்துல் வகாப் முன்னிலையில் இன்று அடிக்கல் நாட்டினார்.
திருநெல்வேலி மாவட்டம், வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை சார்பில் என்.ஜி.ஒ. ஏ காலனி பகுதியில் புதிய உழவர் சந்தை கட்டும் பணியினை மாவட்ட ஆட்சித் தலைவர் வே.விஷ்ணு, பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் மு.அப்துல் வகாப், மாநகராட்சி மேயர் பி.எம்.சரவணன் ஆகியோர் முன்னிலையில் இன்று (14.03.2022) அடிக்கல் நாட்டினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் வே.விஷ்ணு தெரிவித்ததாவது:- தமிழ்நாடு முதல்வர் தமிழக சட்டப்பேரவையில் 110 விதியின்கீழ் அறிவிக்கப்பட்டு திருநெல்வேலி மாநகராட்சியில் குளிர்பதன கிட்டங்கியுடன் கூடிய புதிய உழவர் சந்தை என்.ஜி.ஒ.ஏ காலனி பகுதியில் அமைக்கப்படும் என அறிவித்தார். தமிழ்நாட்டில் 1999 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 14ம் தேதி முதல் உழவர் சந்தையை மதுரை அண்ணா நகரில் முன்னாள் முதல்வர் முத்தமிழ் அறிஞர் கலைஞர் தொடங்கி வைத்தார். இது போன்ற உழவர்சந்தைகள் தமிழ்நாடு முழுவதும் மாநிலத்திலுள்ள பிற பகுதிகளில் 180 உழவர்சந்தைகள் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. திருநெல்வேலி மாவட்டத்தில் மகாராஜநகர், கண்டியப்பேரி, மேலப்பாளையம் மற்றும் அம்பாசமுத்திரம் ஆகிய 4 உழவர் சந்தைகள் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
தற்போது ஐந்தாவதாக என்.ஜி.ஓ. ஏ காலனியில் புதிய உழவர்சந்தை ஆரம்பிக்கப்பட உள்ளது. தற்போது அத்திட்டத்தை மேலும் சிறப்பாக செயல்படுத்த தற்போதைய தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புதியதாக 10 உழவர் சந்தைகள் ஆரம்பிக்க உத்தரவிட்டுள்ளார். அதில் திருநெல்வேலி மாநகராட்சி மக்கள் பயன்பெரும் வகையில் என்.ஜி.ஓ. ஏ காலனியில் இன்று புதியதாக ஆரம்பிக்கப்பட உள்ளது. இத்திட்டத்தின்படி இடைத்தரகர்கள் இன்றி விவசாயிகளே தாங்கள் உற்பத்தி செய்த பொருட்களை நேரடியாக உழவர்சந்தையில் விற்பனை செய்யலாம். பொருட்களின் விலையை அரசு நியமித்த அதிகாரிகள் குழு தீர்மானிக்கும். மேலும் சரியான அளவில் பொருட்கள் விற்கப்படுகின்றனவா என்பதையும் அவர்கள் கண்காணிப்பார்கள். 16 கடைகளும் ஒரு குளிர்பதன கிட்டங்கியும் மற்றும் பொதுமக்கள் எளிதாக காய்கறிகள் மற்றும் பழங்களின் விலைகளை அறியும் வகையில் டிஜிட்டல் போர்டும் மற்றும் உழவர்சந்தையை கண்காணிக்க சிசிடிவி கேமிராக்களும் பொருத்தப்படவுள்ளது. இத்திட்டம் ரூ.60 இலட்சம் நிதயில் செய்லப்படுத்தப்படவுள்ளது.
இதனால் பாளையங்கோட்டை வட்டாரத்தில் உள்ள ரெட்டியார்பட்டி, இட்டேரி, பருத்திப்பாடு, தருவை, முத்தூர், கருங்குளம், முன்னீர்பள்ளம், டக்கரம்மாள்புரம் பகுதிகளைச் சார்ந்த காய்கறிகள் மற்றும் பழங்கள் பயிர் செய்யும் விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை நேரடியாக உழவர்சந்தையில் வந்து விற்பனை செய்து அவர்களது வாழ்க்கைதரம் உயர மிகவும் பயனுள்ளதாக அமையும். இதனால் என்.ஜி.ஓ. ஏ காலனி, என்.ஜி.ஓ. பி காலனி, ரெட்டியார்பட்டி, திருமால்நகர், பொதிகை நகர், பெருமாள்புரம் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு மிகவும் பயனுள்ள வகையில் அமைய உள்ளது. என தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி மேயர் பி.எம்.சரவணன், துணைமேயர் கே.ஆர்.ராஜீ, இணை இயக்குநர் வேளாண்மை இரா.கஜேந்திர பாண்டியன், மாவட்ட விற்பனை செயலாளர் எழில், துணை இயக்குநர் விற்பனை முருகானந்தம், மாவட்ட கவுன்சிலர்கள் கருப்பசாமி, கோட்டயப்பன், சகாய ஜீலியட் மேரி, அம்பிகா, சங்கீதா மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu