நெல்லை ஐ.ஐ.பி. லட்சுமி ராமன் பள்ளியில் நவராத்தி சிறப்பு நகைச்சுவை பட்டிமன்றம்
நெல்லை,ஐ.ஐ.பி. லட்சுமி ராமன் குளோபல் (CBSE) பள்ளியில் நவராத்தி சிறப்பு நகைச்சுவை பட்டிமன்றம் நடைபெற்றது.
நெல்லை,ஐ.ஐ.பி. லட்சுமி ராமன் குளோபல் (CBSE) பள்ளியில் நவராத்தி சிறப்பு நகைச்சுவை பட்டி மன்றம் நடைபெற்றது. சிவப்பிரகாசர் நற்பணி மன்றம் துணைச் செயலாளர் சு.முத்துசாமி, வரவேற்றார். நிகழ்ச்சிக்கு ஐ.ஐ.பி. லட்சுமி ராமன் குளோபல் (CBSE) பள்ளி தாளாளர். S.R.அனந்தராமன் தலைமை தாங்கினார். பட்டி மன்றத்தை மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மாரிராஜன் தொடங்கி வைத்தார். டான் பப்ளிகேசன்ஸ் நிர்வாக இயக்குநர் Dr.S.A .ராஜ்குமார், நிர்வாகிகள்.S.A .ராஜேஸ்வரி, தீபா ராஜ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு நகைச்சுவை பட்டி மன்றம் உயர்ந்த வெற்றிக்கு தேர்ந்தெடுக்கவேண்டியது அரசு பணியா? சுயதொழிலா? என்ற தலைப்பில் நடைபெற்றது. முனைவர்.கவிஞர்.கோ.கணபதிசுப்பிரமணியன் நடுவராக பணியாற்றினார். அரசு பணியே! என்று சாராள் தக்கர் ஆசிரியர் பயிற்சி நிறுவனம் முதல்வர் பேரா.ஜெயமேரி, சுத்தமல்லி அரசு மேனிலைப் பள்ளி ஆசிரியர் கவிஞர். பாப்பாக்குடி இரா.செல்வமணி . தூய சவேரியார் கல்லூரி பேரா. முனைவர் ராகுல் கோல்டன், ஆகியோரும், சுய தொழிலே ! என்று தூய சவேரியார் கல்லூரி பேரா. முனைவர். அந்தோணிராஜ், சங்கர் மேனிலைப் பள்ளி ஆசிரியை செல்வசுந்தரி, எழுத்தாளர் மு.வெ.ரா. ஆகியோர் வாதிட்டனர்.
டான் பப்ளிகேசன்ஸ் நிர்வாக இயக்குநர் S.A .சுரேஷ்குமார், நோக்கர் உரையாற்றினார். இறுதியாக சிறப்பு பட்டிமன்றம் நடுவர் கவிஞர், முனைவர் கோ.கணபதி சுப்பிரமணியன் பேச்சாளர்கள் கருத்தில் இருந்து உயர்ந்த வெற்றிக்கு தேர்ந்தெடுக்க வேண்டியது அரசு பணியை விட ஒரு படி உயர்ந்து சுயதொழிலே என்று தீர்ப்பு வழங்கினார். IIP லெட்சுமி ராமன் குளோபல் CBSE பள்ளி.முதல்வர் மதி இந்துமதி நன்றியுரை,வழங்கினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu