நெல்லை: உலக இதய நாள் தின கருத்தரங்கில் உணவு பாதுகாப்பு விழிப்புணர்வு

அரசு அருங்காட்சியகத்தில் உலக இதய நாள் கண்காட்சி மற்றும் இதயத்திற்கு ஏற்ற உணவு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் நடந்த உலக இதய நாளையொட்டி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

நெல்லை அரசு அருங்காட்சியகமும், பாளையங்கோட்டை சதக்கத்துல்ஸாஹ் அப்பா கல்லூரி விலங்கியல் துறையும் இணைந்து நடத்திய இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட காப்பாட்சியர் சிவ.சத்தியவள்ளி தலைமை தாங்கினார். சதக்கத்துல்ஸாஹ் அப்பா கல்லூரி முதல்வர் முகமது சாதிக் முன்னிலை வகித்தார்.

பொதிகைத் தமிழ்ச் சங்கத் தலைவர் கவிஞர் பேரா "இதயம் காப்போம்" என்ற தலைப்பில் கருத்துரை வழங்கினார். நிகழ்ச்சியில் உணவு பாதுகாப்பு அலுவலர் சங்கரலிங்கம் "இதயத்திற்கேற்ற உணவு முறைகள் "என்ற தலைப்பில் சிறப்புரை பேசுகையில்:-

மாறி வரும் உலகச் சூழ்நிலை காரணமாக நமது உணவு முறைகளும் வெகுவாக மாறிவிட்டது. நமது பாரம்பரியமான உணவு முறைகளில் இருந்தும் நாம் விலகி விட்டோம். தரமான உணவு முறைகள் இல்லாத காரணங்களால் பலவிதமான நோய்கள் ஏற்படுகிறது. குறிப்பாக இதய சம்பந்தமான நோய்களும், இறப்புகளும் அதிகமாகி விட்டது. எனவே இதயத்திற்கு ஏற்ற உணவுகளை நாம் எடுத்துக் கொள்ள வேண்டும்.

கலப்படமில்லாத உணவுகளை அனைவரும் எடுத்துக் கொள்ள வேண்டும். சமையல் எண்ணெய்களை மறுபடியும், மறுபடியும் பயன்படுத்துவதால் கேன்சர் நோய் ஏற்படுகிறது. இதைத் தவிர்ப்பதற்கு உணவு வணிகர்களிடமிருந்து ஒருமுறை பயன்படுத்திய எண்ணெயை பயோ டீசல் தயாரிக்கும் மறு சுழற்சிக்காக அரசாங்கமே விலை கொடுத்து வாங்குகிறது எனக் குறிப்பிட்டார். சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி விலங்கியல் துறைத் தலைவர் முனைவர் சித்திஜமீலா நன்றியுரை வழங்கினார்.

நிகழ்ச்சியில் கல்லூரிப் பேராசிரியர்கள் முகைதீன், பாத்திமா பர்ஜானா, வருவாய் துறை அலுவலகர் சங்க முன்னாள் மாவட்ட தலைவர் ஓய்வு பெற்ற வட்டாட்சியர் முத்து முகமது உட்பட விலங்கியல் துறையின் மாணவ- மாணவிகள் திரளாக கலந்து கொண்டனர்.

சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி விலங்கியல் துறை மூன்றாம் ஆண்டு மற்றும் விலங்கியல் முதுகலை இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவ- மாணவிகள் தயாரித்த உணவு பொருட்களின் கண்காட்சி மற்றும் இருதய நோய் சம்பந்தமாக தயாரிக்கப்பட்ட சுவரொட்டிகளின் கண்காட்சியும் இடம்பெற்றன. கருத்தரங்கில் கலந்து கொண்ட அனைத்து மாணவ- மாணவிகளுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

Tags

Next Story
பொட்டுக்கடலை..தினமும் ஒரு கைப்பிடி சாப்டுங்க..!அவ்ளோ நன்மைகள் இருக்கு அதுல!