நெல்லை: மருத்துவ படிப்பிற்கு தேர்வான அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆட்சியர் பாராட்டு

நெல்லை: மருத்துவ படிப்பிற்கு தேர்வான அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆட்சியர் பாராட்டு
X

அரசு பள்ளியில் தேர்ச்சி பெற்று, மருத்துவ படிப்பில் சேருவதற்கு வாய்ப்பு கிடைத்த பள்ளி மாணவ, மாணவியர்களை மாவட்ட ஆட்சியர் வே.விஷ்ணு நேரில் அழைத்து பாராட்டினார்.

மருத்துவ படிப்பிற்கு தேர்வான அரசு பள்ளி மாணவர்கள் 11 பேரை நெல்லை ஆட்சியர் விஷ்ணு நேரில் அழைத்து பாராட்டினார்.

அரசு பள்ளியில் தேர்ச்சி பெற்று, மருத்துவ படிப்பில் சேருவதற்கு வாய்ப்பு கிடைத்த பள்ளி மாணவ, மாணவியர்களை மாவட்ட ஆட்சித் தலைவர் வே.விஷ்ணு நேரில் அழைத்து பாராட்டினார்.

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், அரசு பள்ளியில் தேர்ச்சி பெற்று மருத்துவ படிப்பில் சேருவதற்கு வாய்ப்பு கிடைத்த பள்ளி மாணவ, மாணவியர்களை மாவட்ட ஆட்சித் தலைவர் வே.விஷ்ணு நேரில் அழைத்து பாராட்டி மருத்துவ சீருடை, புத்தகங்கள், கல்வி உபகரணங்களை வழங்கினார்.

திருநெல்வேலி மாவட்டத்தில் 49 அரசு மேல்நிலைப்பள்ளிகள் உள்ளது. இந்தாண்டு நடைபெற்ற நீட்ட தேர்வில் 7.5 சதவீதம் இடஒதுக்கீட்டில் தேர்ச்சி பெற்ற அரசுப் பள்ளி மாணவ, மாணவியர்கள் 31 பேர் உள்ளனர். இந்த 31 மாணவ,மாணவியர்களில் 28.01.2022 அன்று சென்னையில் நடந்த நேரடி மருத்துவ கலந்தாய்வு கூட்டத்தில் 11 மாணவ,மாணவியர்களுக்கு வெவ்வேறு மருத்துவக் கல்லூரியில் பயில இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதில் அரசு பள்ளியில் படித்த 11 மாணவ, மாணவியர்கள் மருத்துவ படிப்பில் சேருவதற்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.

இதில் மருதகுளம் மேல்நிலைப்பள்ளியில் பயின்ற பள்ளி மாணவி ஏ.பாணுபிரியா நீட் தேர்வில் 330 மதிப்பெண்களும், கல்லணை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பயின்ற பள்ளி மாணவி ஆர்.இசக்கியம்மாள் நீட் தேர்வில் 310 மதிப்பெண்களும், மாணவி என்.நட்சத்திரபிரியா நீட் தேர்வில் 323 மதிப்பெண்களும், மாணவி பி.சௌந்தர்யா நீட் தேர்வில் 301 மதிப்பெண்களும், மாணவி பி.கே.நாளினி நீட் தேர்வில் 344 மதப்பெண்களும், மாணவி எஸ்அப்ரின்பாத்திமா நீட் தேர்வில் 216 மதிப்பெண்களும், மாணவி.எம்.காய்திதி நீட் தேர்வில் 296 மதிப்பெண்களும், ஆகிய 7 மாணவிகள் கல்லனை அரசு மேல்நிலைப்பள்ளியில் பயின்றுள்ளார்கள்.

நடுக்கல்லூர் பள்ளி மாணவி யூ.திவ்யா நீட் தேர்வில் 263 மதிப்பெண்களும், மாணவி எஸ்.விஷ்ணுபிரியா நீட் தேர்வில் 275 மதிப்பெண்களும், மாணவன் எம்.உதயசெல்வம் நீட் தேர்வில் 307 மதிப்பெண்களும், மாணவி எஸ்.கீர்த்திகா நீட் தேர்வில் 302 மதிப்பெண்களும் ஆக மொத்தம் 11 பள்ளி மாணவ, மாணவியர்கள் தேர்ச்சி பெற்று மருத்துபடிப்பில் சேருவதற்கு இடம் கிடைத்துள்ளது.

இந்த பாராட்டு விழாவில் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் பள்ளி மாணவ- மாணவியர்களிடம் மருத்துவ படிப்பில் நன்றாக படிக்க வேண்டும் என அறிவறுத்தினார். இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் ஆ.பெருமாள், அரசு மருத்துவக்கல்லுஸரி மருத்துவமனை முதல்வர் மரு.ரவிச்சந்திரன், மற்றும் அலுவலர்கள், மாணவ, மாணவியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
Weight Loss Tips In Tamil