நெல்லையில் புத்தக திருவிழா 2022 வரும் 18ம் தேதி முதல் துவக்கம்: ஆட்சியர் தகவல்
நெல்லை மாவட்ட நிர்வாகம் சார்பில் ஐந்தாவது புத்தகத்திருவிழா குறித்த அறிவிப்பை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு வெளியிட்டார்.
பொருநை நாகரீகத்தின் பெருமையை எடுத்துரைக்கும் வகையில் நெல்லை மாவட்டத்தில் 100 அரங்குகள் அமைக்கப்பட்டு புத்தகத் திருவிழா, வரும் 18ஆம் தேதி தொடங்கி பத்து நாட்கள் நடைபெறும் நிலையில் அதற்கான விளம்பர பதாகை மற்றும் புத்தக திருவிழாவின் லோகோ வடிவமைப்பதற்கான போட்டியை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்.
தமிழ் இலக்கிய எழுத்தாளர்கள் பலரையும் சாகித்ய அகாடமி விருதாளர்கள் பலரையும் உருவாக்கிய நெல்லை மாவட்டத்தில் வரும் 18ஆம் தேதி தொடங்கி 10 நாட்கள் நெல்லை மாவட்ட நிர்வாகம் சார்பில் ஐந்தாவது புத்தகத்திருவிழா நடைபெறுகிறது. இந்தப் புத்தகத் திருவிழா குறித்த அறிவிப்பை வெளியிட்டு அதற்கான விளம்பர பதாகைகளை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு நெல்லை மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் வைத்து வெளியிட்டார்.
அதனைத்தொடர்ந்து செய்தியாளரை சந்தித்து அவர் தாமிரபரணி நதி மற்றும் பெருமையை நாகரிகத்தின் பெருமையை எடுத்துரைக்கும் வகையில் இவ்விழாவானது பொருனை நெல்லை புத்தகத் திருவிழா 2022 என்ற தலைப்பில் நடைபெறுகிறது. இதில் தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கத்தின் சார்பில் 100க்கும் மேற்பட்ட புத்தக பதிப்பாளர்கள் பங்கேற்கும் வகையில் அரங்குகள் அமைக்கப்படவுள்ளது.
இந்தப் புத்தகத் திருவிழாவில் கலை இலக்கியம், சமூக நாவல்கள், வரலாற்று நாவல்கள், தன்னம்பிக்கை மற்றும் சுய முன்னேற்றத்துக்கான புத்தகங்கள் அரசுத் துறைகளில் வேலை வாய்ப்பிற்கான வழிகாட்டும் புத்தகங்கள் போன்ற பல லட்சக்கணக்கான புத்தகங்கள் ஒரே இடத்தில் கிடைக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அனைத்து புத்தகங்களுக்கும் 10 சதவீத தள்ளுபடி விற்பனைக்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. நெகிழி இல்லா நெல்லை என்ற கருத்தை பின்பற்றி நெகிழி இல்லா புத்தகத்தில் விழாவாக இந்த நிகழ்ச்சியை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்வது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நெல்லை நீர்வளம் தூய பொருளை நெல்லைக்கு பெருமை என்ற தலைப்பில் அரங்குகள் அமைக்கவும் பல்வேறு கருத்தரங்குகள் நடத்திடவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
மேலும் புத்தகத் திருவிழா நடைபெறும் நாட்களில் நாட்டுப்புற கலைகளை உலகறியச் செய்யும் வகையில் நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகளும், இலக்கியம், வரலாறு மற்றும் பண்பாடு ஆகியவற்றை விளக்கும் வகையில் தலைசிறந்த பேச்சாளர்கள் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகளும் நடைபெறுகிறது. மாணவ- மாணவிகளுக்கு பல்வேறு வகையிலான பயிற்சி பெற்றவர்களுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
மேலும் இந்த புத்தகத்திருவிழாவில் பொதுமக்கள் மற்றும் மாணவர்களின் பங்களிப்பின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு நெல்லை மாவட்டத்தில் நடைபெறும் புத்தகத் திருவிழாவிற்கான இலச்சினையை உருவாக்கும் போட்டி அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் தூய பொருமை நெல்லைக்கு பெருநை, புத்தகங்கள், மற்றும் வாசிப்பின் மேன்மை ஆகியவற்றை உள்ளடக்கிய இலச்சனையை (LOGO) பென்சில் படமாகவோ, ஓவியமாகவும், கணினி வரைபடமாக வரைந்து வரும் இரண்டாம் தேதி மாலைக்குள் நெல்லை புத்தகத் திருவிழாவிற்கான மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும் எனவும் தெரிவித்தார். இதில் தேர்ந்தெடுக்கப்பட கூடிய சிறந்த இலச்சனை நெல்லை மாவட்ட நிர்வாகம் சார்பில் நடத்தப்படும் ஐந்தாவது புத்தக திருவிழாவில் அதிகாரபூர்வ இலச்சனையாக அறிவிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu