நெல்லை: ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு 80 வயது மூதாட்டி மனு தாக்கல்
நெல்லை மாவட்டத்தில் ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு 80 வயது மூதாட்டி நேற்று மனு தாக்கல் செய்தார்.
தமிழகத்தில் 9 மாவட்டங்களில் வருகின்ற அக்டோபர் 6 மற்றும் 9 என இரண்டு கட்டங்களாக ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. வேட்புமனு தாக்கல் கடந்த 15 ஆம் தேதி தொடங்கியது. 141 மாவட்ட கவுன்சிலர்கள், 1381 ஒன்றிய கவுன்சிலர்கள், 2900 ஊராட்சி மன்ற தலைவர்கள், 22 ஆயிரத்து 590 ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் என நான்கு பதவிகளுக்கான தேர்தல் நடைபெற உள்ளது.
இந்நிலையில் நேற்று பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சிவந்திபட்டி ஊராட்சி மன்ற தலைவர் தேர்தலில் போட்டியிட பெருமாத்தா 80 வயது மூதாட்டி என்பவர் தன் ஆதரவாளர்களுடன் வந்து மனு தாக்கல் செய்தததை அதிகாரிகள் ஆச்சரியத்துடன் பார்த்தனர். இதேபோல் பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றிய ஆறாவது வார்டு கவுன்சிலர் பதவிக்காக. கே.எஸ் தங்கபாண்டியன் மனுதாக்கல் செய்தார்.
பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மனுத் தாக்கல் செய்ய ஏராளமானோர் கூடிய நிலையில் காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். சமூக இடைவெளியை கடைபிடிக்குமாறும் முகக்கவசங்கள் அணியுமாறும் திரண்டிருந்த மக்கள் மத்தியில் ேபாலீசார் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu