/* */

நெல்லையில் தேசிய மாணவர் படையினர் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்கவும், துணிப்பையை பயன்படுத்துவது குறித்தும் தேசிய மாணவர் படையினர் விழிப்புணர்வு பேரணி.

HIGHLIGHTS

நெல்லையில் தேசிய மாணவர் படையினர் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி
X

நெல்லையில் பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்கவும், துணிப்பையை பயன்படுத்துவது குறித்தும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் தேசிய மாணவர் படையினர் பேரணி நடத்தினர்.

நெல்லையில் பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்கவும், துணிப்பையை பயன்படுத்துவது குறித்தும் பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் தேசிய மாணவர் படையினர் பேரணி நடத்தினர்.

நெல்லையில் ஐந்தாவது பட்டாலியன் மற்றும் ஜான்ஸ் கல்லூரி இணைந்து பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுப்பும், துணிப்பையை கையில் எடுப்போம் என்ற வாக்கியத்தை முன்னிறுத்தி பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் தேசிய மாணவர் படை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் கலந்து கொண்ட பேரணி நடைபெற்றது. இந்த பேரணியில் மாணவர்கள் பிளாஸ்டிக்கை தடுப்போம். மஞ்சள் பையை கையில் எடுப்போம் என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியபடி பொதுமக்களை சந்தித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

இந்த பேரணியை ஐந்தாவது பட்டாலியன் லெப்டினன்ட் கர்னல் பாபி ஜோசப் கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்த பேரணி ஜான்ஸ் கல்லூரியில் துவங்கி சவேரியார் பள்ளி பொது மைய நூலகம் பேருந்து நிலையம் எல்ஐசி ரோஸ்மேரி பள்ளி சாலை தபால் நிலையம் வழியாக கல்லூரியை சென்றடைந்தது. செல்லும் வழியில் பொதுமக்களை சந்தித்து பிளாஸ்டிக் பயன்பாட்டால் ஏற்படும் தீமைகள் குறித்த துண்டுப் பிரசுரங்கள் கொடுத்து விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

Updated On: 3 March 2022 11:44 AM GMT

Related News