பக்ரீத் பண்டிகையையொட்டி மேலப்பாளையத்தில் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை
மேலப்பாளையத்தில் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை நடைபெற்றது.
ஹஜ் பெருநாள் எனவும், இறை தூதரின் தியாகத்தை நினைவு கூறும் வகையிலும் பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. உலகம் முழுவதும் இருக்க கூடிய இஸ்லாமியர்கள் இப்பண்டிகையை சிறப்பாக கொண்டாடுகின்றனர். இஸ்லாமியர்களின் பண்டிகைகளில் பக்ரீத் பண்டிகை முக்கிய இடம் பெறுகிறது. இஸ்லாமியர்களின் ஐந்து கடமைகளில் ஒன்றான வாழ்வில் ஒரு முறை ஏனும் ஹஜ் பயணம் மேற்கொள்ள வேண்டும் என்பதை இப்பண்டிகை வலியுறுத்துகிறது.
இந்த நிலையில் இந்த பண்டிகையையெட்டி திருநெல்வேலி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகைகள் நடத்தி சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். திருநெல்வேலி மேலப்பாளையத்தில் புத்தாடை அணிந்து ஜின்னா திடலில் கூடிய ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் இடையே அவர்களின் மதகுரு சிறப்பு தொழுகை நடத்தினார். ஏக இறைவனின் தூதுவரின் தியாகத்தை நினைவு கூறும் சம்பவங்களை எடுத்துரைத்தார்.
தொடர்ந்து சிறப்பு தொழுகை நடைபெற்றது. பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அப்துல் வகாப் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் இதில் கலந்துகொண்டு ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை பரிமாறி கொண்டனர். முன்னதாக வீடுகளில் ஆடுகளை பலியிட்டு ஏழை, எளிய மக்களுக்கு வழங்கியதோடு அண்டை வீட்டாரோடும் பகிர்ந்து கொண்டனர். கடந்த வாரம் மேலப்பாளையத்தில் நடந்த ஆட்டு சந்தையில் 5 கோடி ரூபாய்க்கு ஆடுகள் விற்பனையானது குறிப்பிடத்தக்கது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu