நெல்லை மாவட்ட சட்டபணிகள் ஆணைக்குழு சார்பில் மெகா சட்ட விழிப்புணர்வு முகாம்

நெல்லை மாவட்ட சட்டபணிகள் ஆணைக்குழு சார்பில் மெகா சட்ட விழிப்புணர்வு முகாம்
X

திருநெல்வேலி மாவட்டம் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் மெகா சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. 

சட்டப்பணிகள் களத்தில் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் 21 அரசு துறைகளின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்டப்பணிகள் குறித்த கண்காட்சிகள் நடைபெற்றது.

திருநெல்வேலி மாவட்டம் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் மெகா சட்ட விழிப்புணர்வு முகாம். மாவட்ட முதன்மை நீதிபதி ஏ.நசீர் அகமது, மாவட்ட ஆட்சித்தலைவர் வே.விஷ்ணு ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை நீதிமன்ற வளாகத்தில் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் மெகா சட்ட விழிப்புணர்வு முகாம் மாவட்ட முதன்மை நீதிபதி ஏ.நசீர் அகமது , மாவட்ட ஆட்சித்தலைவர் வே.விஷ்ணு ஆகியோர் தலைமையில் இன்று (13.11.2021) நடைபெற்றது.

இந்தியா சுதந்திரம் பெற்ற 75வது ஆண்டு கொண்டாடும் வகையில் நாடு முழுவதிலும் சட்ட விழிப்புணர்வு, சட்ட உதவி, மற்றும் அரசு நல திட்டங்களை அனைத்து தரப்பு மக்களுக்கும் அவர்களின் இருப்பிடத்திற்கே சென்று கொண்டு செல்லும் வகையில் (Pan india Awareness and out reach programme ) கடந்த 2ம் தேதி முதல், நவம்பர் 14ஆம் தேதி வரை தேசிய சட்ட பணிகள் ஆணைக்குழு மற்றும் தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் உத்தரவின் அடிப்படையில் பல்வேறு விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட்டது.

அதன் ஒரு பகுதியாக மெகா சட்ட விழிப்புணர்வு மற்றும் சட்டப்பணிகள் களம் இன்று நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்றது. சட்ட பணிகள் களத்தில் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் 21 அரசு துறைகளின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்டப்பணிகள் குறித்த கண்காட்சிகள் நடத்தப்பட்டது.

இக்கண்காட்சியில் தாட்கோ சார்பில் ரூ.16.20 இலட்சம் மதிப்பில், 18 பயனாளிகளுக்கு கறவை மாடுகள் வழங்குவதற்கான நிதியுதவியும், மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் ரூ.58 ஆயிரம் மதிப்பில் 6 பயனாளிகளுக்கு தையல் இயந்திரம் மற்றும் தேய்ப்பு பெட்டிகளும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் மூலம் ரூ.41 ஆயிரம் மதிப்பில், 4 பயனாளிகளுக்கு தையல் இயந்திரம் மற்றும் தேய்ப்பு பெட்டிகளும், தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் மூலம் ரூ.1.65 கோடி மதிப்பில் 20 பயனாளிகளுக்கு வீடுகள் கட்டுவதற்கான ஆணைகளும், திருநெல்வேலி மற்றும் மானூர் வட்டாட்சியர் அலுவலகம் சார்பில் ரூ. 6 இலட்சம் மதிப்பில் 4 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டாக்களும் மற்றும் 16 பயனாளிகளுக்கு நத்த வீட்டுமனைப்பட்டா மாறுதல் ஆணைகளும், சமூக பாதுகாப்பு திட்டம் சார்பில் ரூ.2.91 இலட்சம் மதிப்பில் 40 பயனாளிகளுக்கு பாதுகாப்பு திட்ட நிதியுதவியும், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில் 5 பயனாளிகளுக்கு பசுமை வீடுகளும் மற்றும் 5 பயனாளிகளுக்கு மகாத்மா காந்தி வீட்டு வசதி குடியிருப்புகளும், தொழிலாளர் நலத்துறை சார்பில் ரூ.26 ஆயிரம் மதிப்பில் 30 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளும், மாவட்ட வழங்கல்துறை சார்பில் 10 பயனாளிகளுக்கு புதிய குடும்ப உறுப்பினர் அட்டைகளும், 9 மகளிர் திட்டம் சார்பில் ரூ.20.60 இலட்சம் மதிப்பில் 22 பயனாளிகளுக்கு சமுதாய முதலீட்டு நிதிகளும், குழந்தைகள் நல அலுவலகம் சார்பில் ரூ. 2 இலட்சம் மதிப்பில் 20 பயனாளிகளுக்கு நிதி ஆதரவு திட்டமும், முன்னோடி வங்கி சார்பில் 2 இலட்சம் மதிப்பில் 20 பயனாளிகளுக்கு சாலையோர வியாபாரிகளுக்கான கடன் உதவிகளும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் ரூ.6.88 இலட்சம் மதிப்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்களும், கால்நடைத்துறையின் சார்பில் ரூ. 1.50 இலட்சம் மதிப்பில், 4 பயனாளிகளுக்கு தேசிய வேளாண்மை திட்டத்தின் கீழ் செயல்முறை ஆணைகளும், மற்றும் ரூ.3000 மதிப்பில் 6 பயனாளிகளுக்கு தாது உப்புகலவையும், தோட்டக்கலைத்துறையின் சார்பில் ரூ. 33 ஆயிரம் மதிப்பில் 3 பயனாளிகளுக்கு தேசிய வேளாண் வளர்ச்சி திட்டமும், ரூ4.5 இலட்சம் மதிப்பில் 3 பயனாளிகளக்கு தேசிய தோட்டக்கலை இயக்கமும், வட்டார போக்குவரத்துறையின் சார்பில் ரூ. 15 அயிரம் மதிப்பில் 10 பயனாளிகளுக்கு எல்.எல்.ஆர் மற்றும் இலவச தலைக்கவசமும், பாளையங்கோட்டை வட்டார வளர்ச்சி அலுவலகம் சார்பில், ரூ.9.70 இலட்சம் மதிப்பில் 5 பயனாளிகளுக்கு பாரத பிரதமரின் அனைவருக்கும் வீட்டு கட்டுவதற்கான ஆணைகளும், மற்றும் ரூ.46.5 ஆயிரம் மதிப்பில் 5 பயனாளிகளுக்கு உறிஞ்சிக்குழி வழங்குதலும், பாளையங்கோட்டை வட்டாட்சியர் அலுவலகம் சார்பில் 10 பயனாளிகளுக்கு நத்த பட்டா மாற்றம் ஆணைகளும், வேளாண்மைத்துறை சார்பில் ரூ. 20 ஆயிரம் மதிப்பில், 5 பயனாளிகளுக்கு மரக்கன்றுகள் மற்றும் இடபொருட்களும், அரச கேபிள்டிவி சார்பில் 40 நபர்களுக்கு புதிய ஆதார் பதிவு அட்டைகளும் ஆக மொத்தம் 320 பயனாளிகளுக்கு, ரூ.2.40 கோடி மதிப்பில், நலத்திட்ட உதவிகளை மாவட்ட முதன்மை நீதிபதி ஏ.நசீர் அகமது, மாவட்ட ஆட்சித்தலைவர் வே.விஷ்ணு ஆகியோர் வழங்கினார்கள்.

மேலும் அனைத்து துறை சார்பில் நடைபெற்ற கண்காட்சி அரங்குகளையும் பார்வையிட்டார்கள். இந்நிகழ்ச்சியில் நிரந்திர மக்கள் நீதிமன்ற தலைவர் நீதிபதி சமீனா, சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் நீதிபதி பிஸ்மிதா, குடும்ப நல நீதிபதி குமரேசன், தலைமை குற்றவியியல் நீதித்துறை நடுவர் அமிர்தவேலு, மாவட்ட வருவாய் அலுவலர் ஆ.பெருமாள், மகளிர் திட்ட இயக்குநர் சாந்தி, சமூக பாதுகாப்பு திட்ட தனி துணை ஆட்சியர் குமாரதாஸ், வேளாண்மை இணை இயக்குநர் கஜேந்திர பாண்டியன், வட்டார போக்குவரத்து அலுவலர் சந்திரசேகர், குடிசை மாற்று வாரிய நிர்வாக பொறியாளர் சாந்தி, மாற்றுதிறனாளிகள் நல அலுவலர் பிரம்ம நாயகம், வட்டாட்சியர்கள் ஆவுடையப்பன், சுப்பிரமணியன், மற்றும் சார்பு நீதிபதிகள், குற்றவியல் நடுவர்கள், வழக்குறிஞர்கள், அரசு அலுவலர்கள் உட்பட பலர் கொண்டார்கள்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!